மிகவும் அதிகம் எதிர்பார்த்த மெய்ஸூ இ3 ஸ்மார்ட்போன் மாடலை வரும் மார்ச் 6-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது மெய்ஸூ நிறுவனம். மேலும் சாம்பெய்ன் கோல்ட், பிளாக் , டார்க் ப்ளூ நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

மெய்ஸூ இ3 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
இக்கருவி 4ஜிபி/64 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 12+2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மெய்ஸூ இ3 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆக்டோ-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த மெய்ஸூ இ3 ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை, இருந்தபோதிலும் பல்வேறு புதிய அம்சங்களை
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.