ஓரம் கட்டுது ஆப்பிள்.. வெறும் ரூ.39,995 போதும்.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 4800mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ், ஐக்யூ, விவோ போன்களுடன் ஒப்பிடுகையில், கம்மியான பட்ஜெட்டில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போனாக இந்த மெய்சு 21 மாடல் இருக்கிறது. இந்த மாடலின் மற்ற அம்சங்களும் மார்கெட்டை மிரளவே செய்து இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
மெய்சு 21 அம்சங்கள் (Meizu 21 Specifications): இந்த போன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 Mobile) சிப்செட் கொண்டிருக்கிறது. அதோடு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மெய்சு போனின் கேமரா சென்சார் பக்கா பிரீமியமாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. 200 எம்பி மெயின் கேமரா சாம்சங் எச்பி3 (Samsung HP3) சென்சாருடன் வருகிறது. இந்த கேமராவோடு 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 5 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கேமராவில் மேக்ரோ மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. இந்த போனில் 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மெய்சு 21 போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.55 இன்ச் (2340×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது.
இதுவொரு ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் இருக்கின்றன.

அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 65W பிடி (PD) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4800mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.
இந்த போனின் இன்-டிஸ்பிளேவில் 3டி சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Sonic Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் மோட் 6.0 (Game Mode 6.0), எம்எஞ்சின் அல்ட்ரா ஹாப்டிக் எஞ்சின் (mEngine Ultra Haptic Engine) போன்ற கேமிங் பிரியர்களுக்கான பிரத்யேக பீச்சர்கள் வருகின்றன.
IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மெய்சு போனில் கீரின் (Green), வைட் (White), பிளாக் (Black) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய 4 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.
இந்த போனின் விலையை பொறுத்தவரை 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.39,995க்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.43,525க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்டவேரியண்ட் ரூ.47,055க்கு விற்பனையாகிறது. இப்போதைக்கு சீனாவில் மட்டும் கிடைக்கிறது.
ஐக்யூ 12, ஒன்பிளஸ் 12, ரெட் மேஜிக் 9 ப்ரோ போன்ற போன்களிலும் சிட்செட் முதல் பேட்டரி வரையில், கிட்டத்தட்ட இந்த போனை போலவே அம்சங்கள் வருகின்றன. ஆனால், அவற்றின் விலையை ஒப்பிடுகையில் இந்த போன் மட்டுமே மிகவும் கம்மியான விலைக்கு கிடைக்கிறது. அதோடு ஆப்பிள் போன் போன்ற டிசைனை கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








