Home
Mobile

மிரளவிட்ட பிராண்ட்.. பட்ஜெட்ல 200MP கேமரா.. 12GB ரேம்.. OLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு நிகராக அல்ட்ரா பிரீமியம் டிசைனில் 200 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், 80W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎல்இடி டிஸ்பிளே போன்ற அம்சங்களுடன் மெய்சு 21 (Meizu 21) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

மெய்சு 21 அம்சங்கள் (Meizu 21 Specifications): இந்த போன் ப்ரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், அம்சங்களிலும் பின்னிப்பெடல் எடுக்கிறது. 6.55 இன்ச் (2340×1080 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இதுவொரு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 393 பிபிஐ (PPI) மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

200MP கேமரா.. 12GB ரேம்.. OLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஃப்ளைம் 10.5 (Flyme 10.5) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 Mobile) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த மாடலில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொண்டிருக்கிறது. இந்த போனில் ப்ரீமியமான டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, சாம்சங் எச்பி3 (Samsung HP3) சென்சார் கொண்ட 200 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி டெப்த் கேமரா வருகிறது. இந்த டெப்த் கேமராவில் மேக்ரோ சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 32 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது.

200MP கேமரா.. 12GB ரேம்.. OLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்த போனில் 3டி சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Sonic Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4800mAh பேட்டரி கொண்டிருக்கிறது. அதோடு 65W பிடி (PD) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் கேமிங் பிரியர்களுக்காகவே பேட்டரி ஹீட்டை தவிர்க்க ஐஸ் வேர்ல்டு கூலிங் டெக்னாலஜி (Ice World Cooling Technology), கேமிங் மோட் 6.0 (Game Mode 6.0) மற்றும் எம்எஞ்சின் அல்ட்ரா ஹாப்டிக் எஞ்சின் (mEngine Ultra Haptic Engine) போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.

இந்த மாடலில் கீரின் (Green), வைட் (White), பிளாக் (Black) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய நான்கு கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,995ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.43,525ஆகவும் இருக்கிறது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.47,055ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 5ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் குளோபல் வேரியண்ட் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Meizu 21 With 200MP Camera, 12GB RAM Sale From December 5 in China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X