Home
Mobile

மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மெய்ஸூ நிறுவனம் சீனாவில் மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080×2234 பிக்சல் திர்மானம் மற்றும் 18:7:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி /256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.

மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 12எம்பி+8எம்பி +5எம்பி என மூன்று ரியர் கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்;போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.20,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Meizu 16T launched with triple rear cameras, Snapdragon 855 SoC: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X