ஃபுல் வியூ டிஸ்ப்ளே வடிவமைப்புடன் அசத்தும் மெய்ஸூ 15 பிளஸ்.!
இக்கருவியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
மெய்ஸூ நிறுவனத்தின் மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன, இப்போது அந்நிறுவனத்தின் மெய்ஸூ 15 பிளஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

மெய்ஸூ 15 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஃபுல் வியூ பெரிய டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் இவற்றில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மெய்ஸூ 15 பிளஸ் ஸ்மார்ட்போனில் பின்புறம் இரட்டை கேமரா அமைப்ப இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதன் லென்ஸ்கள் செங்குத்தாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இக்கருவியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
ஹோம் பட்டன், கைரேகை ஸ்கேனர் போன்ற தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
மெய்ஸூ 15 பிளஸ் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்த அதிக வாயப்புகள் உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications