ரூ.10,999/- என்ற விலையை மீறிய அம்சங்கள் கொண்ட புதிய சென்ட்ரிக் போன்.!

|

இந்திய மொபைல் தயாரிப்பாளரான சென்ட்ரிக் மொபைல்ஸ் நிறுவனம் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதன் புதிய கருவியொன்றை ரூ.10,999/- என்ற விலை நிர்ணயத்தின் கேள் அறிமுகம் செய்துள்ளது. சென்ட்ரிக் ஏ1 என்ற பெயரைக்கொண்ட அந்த ஸ்மார்ட்போன், அதன் விலை டேக்கை மீறிய அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது என்றே கூறலாம்.

ரூ.10,999/- என்ற விலையை மீறிய அம்சங்கள் கொண்ட புதிய சென்ட்ரிக் போன்.!

10கே என்ற பட்ஜெட்டை கொண்டுள்ள இந்த தொலைபேசி ஸ்னாப்டிராகன் 430 ஆக்டாகோர் செயலி உடனான 3 ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. சேமிப்பு ஆதரவை பொறுத்தமட்டில், இக்கருவி 32 ஜிபி அளவிலான உள்ளடக்க நினைவகம் மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஸ்லாட் ஆதரவையும் கொண்டுள்ளது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

சென்ட்ரிக் ஏ1 ஒரு 5.5 அங்குல முழு எச்டி ஐபிஎஸ் தொடுதிரையுடன் வருகிறது, இதில் ஒரு டிராகன்டெயில் (Dragontrail) கிளாஸ் கார்ட் உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஸ்ட் சார்ஜ்

பாஸ்ட் சார்ஜ்

இதன் தயாரிப்பாளர்களின்படி, இக்கருவி க்வால்காம் நிறுவனத்தின் பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்ப ஆதரவு கொண்ண்டுள்ளது, இது 30 நிமிடங்களில் 50 சதவிகிதத்திற்கும் மேலான பேட்டரியை நிரப்பும் என்றும் நிறுவனம் கூறுகிறது.

பேட்டரி & கேமரா

பேட்டரி & கேமரா

இக்கருவி ஒரு 3,000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13எம்பி முதன்மை கேமரா மற்றும் இரட்டை எல்இடி ஃபிளாஷ் கொண்ட ஒரு 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ஒரு உலோக உடல் வடிவமைப்பு மற்றும் பின்புறம் ஒரு கைரேகை சென்சார் கொண்டுள்ள சென்ட்ரிக் ஏ1 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு இயங்குகிறது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

இக்கருவியின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், ஒரு கலப்பு சிம் ஸ்லாட், 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்ற அனைத்து வழக்கமான இணைப்பு அம்சங்களையும் வழங்குகிறது.

வண்ண மாறுபாடு

வண்ண மாறுபாடு

சென்ட்ரிக் ஏ1 இப்போது கருப்பு + சாம்பல் பதிபில் கிடைக்கப்பெறுகிறது, நிறுவனத்தின் பட்டியலின் படி, இக்கருவி தங்கம் மற்றும் வெள்ளை +தங்கம் ஆகிய வண்ண மாறுபாடுகளில் விரைவில் தொடங்கப்படும்.

Best Mobiles in India

English summary
Meet the new Centric A1 - A Rs 10,999 phone that comes with rich features. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X