இந்த ஐபோன் X வெறும் ரூ.6500/- தான்; ஆப்பிளுக்கு "பல்ப் கொடுத்த" சீன நிறுவனம்.!

|

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் புதிய தொடர் ஐபோன் X (ரோமானிய எண்படி ஐபோன் 10) ஆகிய புதிய மாடல் ஐபோன்களை அறிமுகப்படுத்தியது என்பதை நாம் அறிவோம்.

அறிமுகமான முதல் இரண்டு மாடல்களும் வருகிற செப்டம்பர் 29 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது, மறுகையில் உள்ள ஐபோன் X ஆனது நவம்பர் 3-ஆம் தேதியன்று சந்தைக்குள் நுழையவுள்ளது. ஐபோன் 8 மற்றும் ஐபோன் ப்ளஸ் எக்ஸ் 8,000 மற்றும் ஐபோன் ஸ்மார்ட்போனில் ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ், இந்தியாவில் 64,000 ரூபாய்க்கு கிடைக்கிறது.

"காப்பிகேட்"

வழக்கம்போல இந்த புதிய தொலைபேசிகளும் அனைவராலும் அணுக முடியாத - ஐபோன் 8 மற்றும் 8 ப்ளஸ் ரூ.64,000/- முதல் மற்றும் ஐபோன் X ரூ.89,000/- முதல் - விலை நிர்ணயம் கொண்டுள்ளது. இருப்பினும் கவலைப்பட வேண்டாம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபோன் X போன்றே உள்ள "காப்பிகேட்" (அச்சு அசலான நகல்) ஸ்மார்ட்போன் ஒன்று ரூ.6,500/-க்கு கிடைக்கிறது.

கூபோன் (GooPhone)

கூபோன் (GooPhone)

அட நிஜமாகத்தான்.! சீன தொலைபேசி உற்பத்தியாளரான கூபோன் (GooPhone) மிகச்துல்லியமாக ஐபோன் X போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள தன கூபோன் X ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது.

தோல்வியில் தான் முடிகிறது

தோல்வியில் தான் முடிகிறது

ஆப்பிள் நிறுவனம் அதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்களை இரகசிய பராமரிக்க, எவ்வளவு முயற்சி செய்தாலும் அது தோல்வியில் தான் முடிகிறது. எல்லாவற்றை விட மோசம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஓஎஸ் 11 அப்டேட் சார்ந்த லீக்ஸ் வெளியானது தான்.

அச்சு அசலான போலி கருவி

அச்சு அசலான போலி கருவி

சரி அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் கூபோன் X என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளதென்பதை காண்போம். பிரீமியம் சாதனங்களின் போலிகளை விற்பனை செய்வதற்காக அறியப்பட்ட மிகவும் புகழ்பெற்ற சீன நிறுவனமான கூபோன், ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஐபோன் X சாதனத்தின் அச்சு அசலான போலி கருவியை வெளியிட்டுள்ளது.

ஐபோன் எக்ஸ் போன்றே வடிவமைப்பு

ஐபோன் எக்ஸ் போன்றே வடிவமைப்பு

இதில் கொடுமை என்னவென்றால் நிஜமான ஐபோன் X சந்தையாயி எட்டும் முன்னரே கூபோன் X ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கி விட்டதுதென்பது தான். இந்த மிக மலிவான "ஐபோன் X" சாதனத்தின் அம்சங்களை பொறுத்தமட்டில், கூபோன் ஆனது கிட்டத்தட்ட ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்றே வடிவமைப்பு பெற்றுள்ளது. ஆனால் ஐஓஎஸ் இயங்குதளத்திற்கு பதிலாக ஆண்ட்ராய்டு கொண்டு வேலை செய்யும்.

எச்டி டிஸ்ப்ளே

எச்டி டிஸ்ப்ளே

இக்கருவி ஒரு 5.5 அங்குல எட்ஜ் டூ எட்ஜ் (720 × 1280) எச்டி டிஸ்ப்ளே, ஒரு மீடியா டெக் எம்டிகே6580 சிப் கொண்டு வருகிறது. மேலும் 1 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் வருகிறது.

3ஜி சேவை

3ஜி சேவை

கிஸ்சீனா வெளியிட்டுள்ள ஒரு தகவலில், "இந்த சாதனமானது 3ஜி சேவையை மட்டுமே வழங்கும் போதிலும் கூட போலியான 4ஜி எல்டிஇ நிலைக் குறிகாட்டிகளைக் காண்பிக்கும், மேலும் 16 ஜிபி அளவிலான உள்ளடக்க நினைவகம் கொண்டுள்ள போதிலும் 64ஜிபி என்று காண்பிக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

டூயல் ரியர் கேமரா

டூயல் ரியர் கேமரா

இது மட்டுமல்லாமல், கூபோன் X ஆனது டூயல் ரியர் கேமரா அமைப்பும் கொண்டுள்ளது, அதாவது இரண்டு 8எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது மற்றும் முன்பக்கம் 2எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.இக்கருவி 100 டாலர்களுக்கு விற்கப்படுகிறது, அதாவது இந்திய மதிப்பின்படி ரூ.6,500/- ஆகும்.

Best Mobiles in India

English summary
Meet GooPhone X; The Rs 6500 Chinese copy of newly launched Apple iPhone X. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X