ரெனோ மாடலின் அடுத்தக்கட்ட போன்: சைலண்டா வேலைய பார்க்கும் ஒப்போ!

|

ஒப்போ நிறுவனத்தின் புதிய மாடல் ரெனோ 3 ஏ ஸ்மார்ட்போனுக்கு பணியில் அந்த நிறுவனம் இறங்கியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒப்போ ரெனோ 3ப்ரோ

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒப்போ ரெனோ 3ப்ரோ

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனானது கடந்த மார்ச் 6 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது

ஸ்மார்ட்போனில மீடியாடெக் ஹீலியோ

ஸ்மார்ட்போனில மீடியாடெக் ஹீலியோ

ஆண்ட்ராய்டு 10 இந்த ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனில மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 10(ColorOS 7) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி ஒப்போ ரெனோ 3ப்ரோ சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது.

NASA சாட்டிலைட் புகைப்படத்தில் நம்பமுடியாத தகவலை வெளிப்படுத்திய இந்தியா!NASA சாட்டிலைட் புகைப்படத்தில் நம்பமுடியாத தகவலை வெளிப்படுத்திய இந்தியா!

44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா

44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா

44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

4025எம்ஏஎச் பேட்டரி

4025எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4025எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படும்.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்;மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் வெளிவந்தது, குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், பேஸ் அன்லாக் வசதி, உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், டூயல்-சிம் ஆதரவு, ப்ளூடூத், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 175கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ரெனோ 3ப்ரோ விலை

ஒப்போ ரெனோ 3ப்ரோ விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,990-ஆக உள்ளது, அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,990-ஆக உள்ளது.

புதிய ரெனோ தொடர் ஸ்மார்ட் போன்

புதிய ரெனோ தொடர் ஸ்மார்ட் போன்

இந்த நிலையில் ஒப்போ நிறுவனம் புதிய ரெனோ தொடர் ஸ்மார்ட் போனிற்கான பணியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த போனானது புதிய ரெனோ 3 ஏ என்று அழைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கிறது. டிப்ஸ்டர் இஷான் அகர்வாலுடன் இணைந்து ப்ரைஸ் பாபா தற்போது வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட் போனானது 6.44 இன்ச் அமோலேட் டிஸ்ப்ளே மற்றும் புல் ஹெச்டி ரெசல்யூஷன் வசதியோடு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைலண்டா வேலைய பார்த்த சீனா: எவரெஸ்ட் உச்சியில் 5G டவர்- இன்னோனு இருக்கு!சைலண்டா வேலைய பார்த்த சீனா: எவரெஸ்ட் உச்சியில் 5G டவர்- இன்னோனு இருக்கு!

க்வால்காம் ஸ்னாப்டிராகன்

க்வால்காம் ஸ்னாப்டிராகன்

அதோடு க்வால்காம் ஸ்னாப்டிராகன் 665 ப்ராசஸர் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியோடு இயக்கப்படுகிறது. அதேபோல் கலர் ஓஎஸ் 7.1 மூலம் ஆண்ட்ராய்டு 10 வதியோடு இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சார்ஜிங் தரப்பு குறித்து எந்தவித தகவலும் வெளிவரவில்லை.

48 மெகாபிக்சல் அளவிலான மெயின் கேமரா

48 மெகாபிக்சல் அளவிலான மெயின் கேமரா

அதேபோல் இந்த போன் 48 மெகாபிக்சல் அளவிலான மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கூடுதல் கேமரா வசதியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் விலை குறித்த அம்சங்கள் முழுமையாக வெளிவரவில்லை.

Best Mobiles in India

English summary
May oppo next release is reno 3A with android 10 and 16 MP selfie!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X