Home
Mobile

மேக்ஸ் பட்ஜெட் போன் vs வியூவ்சோனிக் ஸ்மார்ட்போன்

By Super
மேக்ஸ் பட்ஜெட் போன் vs வியூவ்சோனிக் ஸ்மார்ட்போன்
இந்திய மார்க்கெட்டில் மேக்ஸ் மற்றும் வியூவ்சோனிக் ஆகிய நிறுவனங்கள் வெகுவாக பிரபலமாகிவிட்டன. ஆனால், அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள குறைந்த விலை முதல் அதிக விலை கொண்ட மாடல்களை இரு நிறுவனங்களும் தொடர்ந்து களமிறக்கி வருகின்றன.

இந்த வகையில், மேக்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வரும் ஸ்கோப் எம்டி-150 பட்ஜெட் விலை போன் மற்றும் வியூவ்சோனிக் வி-350 போன்களின் சிறப்பம்சங்களை காணலாம்.

வியூவ்சோனிக்கின் எம்டி-350 மாடல் ஆன்ட்ராய்டு வி-2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக வந்துள்ளது.1 ஜிகாஹெர்ட்ஸ் கியூவல்காம் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளதால் மல்டி டாஸ்க்கிங் பணிகளின்போது வேகத்தில் பின்னுகிறது. மேலும், 3டி தொழில்நுட்பம் கொண்ட கெப்பாசிட்டிவ் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளதால் வீடியோ கேம் விளையாடும்போது பரவசமான உணர்வை ஏற்படுத்துகிறது.

மேக்ஸ் மொபைல்ஸ் அறிமுகம் செய்துள்ள ஸ்கோப் எம்டி-150 போன் பட்ஜெட் ரகத்தை சேர்ந்தது. இது முழுவதும் தொடுதிரை அம்சம் கொண்ட ஜாவா சாப்ட்வேர் சாப்ட்வேர் சப்போர்ட்டில் இயங்குகிறது. மற்ற போன்களைவிட இதன் டச் ஸ்கிரீன் அப்ளிகேஷன்களை இயங்குவதற்கு வெகு எளிதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மேக்ஸ் தெரிவிக்கிறது.

மேக்ஸ் ஸ்கோப் எம்டி -150 போன் டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதிகொண்டது. தரமான வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் கேமராவை பெற்றுள்ளது. எப்எம் ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்டவையும் உண்டு.

வியூவ்சோனிக்கில் 5 மெகாபிக்செல் கேமரா, ஹைடெபினிஷன் வீடியோ ரெக்கார்டிங், இடிஆருடன் கூடிய புளூடூத் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

இணைப்பு வசதிகளில் மேக்ஸ் ஸ்கோப் சற்று பின்தங்குகிறது. புளூடூத், யுஎஸ்பி போர்ட் மற்றும் நேரடியாக யாகூ லாஞ்சர் செல்லும் வசதிகள் இருக்கிறது. 2 ஜிபி சேமிப்பு திறனை கொண்டுள்ள இந்த போனின் சேமிப்பு திறனை 8 ஜிபி வரை கூட்ட முடியும்.

வியூவ்சோனிக் வி-350 ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டியூவல் சிம் கார்டு வசதியுடன் வந்துள்ளது. இதில் 3.5 இஞ்ச் தொடுதிரையும் 512 எம்பி ரேமையும் கொண்டுள்ளது. இதன் சேமிப்பு திறனை 32 ஜிபி வரை கூட்ட முடியும்.

விலையை வைத்து பார்க்கும்போது இரண்டு போன்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. வியூவ்சோனிக் வி-350 ஆன்ட்ராய்டு போன் ரூ.17,000 விலையிலும், மேக்ஸ் ஸ்கோப் எம்டி-150 ரூ.3,272 விலையிலும் விற்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X