Home
Mobile

மொபைல் சந்தையில் புதிய வரவு மலிவு விலை டச் ஸ்கிரீன் ஃபோன் மேக்ஸ் ஸ்கோப் எம்டி 150

By Super
மொபைல் சந்தையில் புதிய வரவு மலிவு விலை டச் ஸ்கிரீன் ஃபோன் மேக்ஸ் ஸ்கோப் எம்டி 150
அனைத்து மொபைல் நிறுவனங்களும் ஃபிசிக்கல் கீபேடுடன் கூடிய டச் ஸ்கிரீன் மொபைல்களை அறிமுகப்படுத்தத் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதன் விளைவாக மேக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள டச் ஸ்கிரீன் ஃபோன் தான் ஸ்கோப் எம்டி 150.

மேக்ஸ் குழுவின் சேர்மேன் திரு. அஜய் அகர்வால் கூறுகையில், இந்திய மொபைல் சந்தையில் டச் ஸ்கிரீன் மொபைல்களின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் எங்கள் நிறுவனம் டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய ஸ்கோப் எம்டி 150 என்ற மலிவு விலை மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார்.

மேக்ஸ் ஸ்கோப் எம்டி 150 மொபைலில் 2.8 இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் ஜாவா பேஸ்டு ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்ட டிவைஸ்கள் உள்ளது.

மேக்ஸ் ஸ்கோப் எம்டி 150 டூயல் சிம் கார்டு வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதில் பேஸ்புக், யாஹூ லான்ச்சர்(ஸாஹூ மெசன்ஜர், யாஹூ மெயில்) உள்ளது.

மேலும் அது தரமான கேமரா மற்றும் வீடியோ ரிக்கார்டிங் வசதியையும் அளிக்கிறது. இவற்றின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த மொபைல் மலிவு விலையில் கிடைக்கின்றபோதிலும் இது மல்டி ஃபார்மட் மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர் வசதியை கொண்ட மல்டிமீடியா சப்போர்ட்டை வழங்குகிறது.

மேக்ஸ் ஸ்கோப் எம்டி 150 எஃப்எம் ரேடியோ, யுனிவர்சல் 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத், யுஎஸ்பி பிசி ஸின்க் கனக்டிவிட்டி போன்ற ஏராளமான வசதிகளை வழங்குகிறது. மேலும் இது 2ஜிபி மைக்ரோ எஸ்டி மெமரி கார்டு கொண்டது.

மேக்ஸ் ஸ்கோப் எம்டி 150-ன் சிறப்பம்சங்கள்:

* டச்ஸ்கிரீன் டிஸ்பிளே

* டூயல் சிம்கார்டு வசதி

* யாகு லான்ச்சர், பேஸ்புக் வசதி

* 8.5 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய 2ஜிபி மெமரி

* 1.3 மெகா பிக்சல் கேமரா

* எஃப்எம் ரேடியோ

* மல்டி ஃபார்மட் மியூசிக் பிளேயர்

* ஜாவா வசதி

* தரமான பேட்டரி பேக்கப்

மேக்ஸ் ஸ்கோப் எம்டி 150 ரூ. 3 ஆயிரத்து 272-க்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X