Home
Mobile

பேட்டரி பேக்கப்பில் அசத்தும் மேக்ஸ் பிரைமோ!

By Super

பேட்டரி பேக்கப்பில் அசத்தும் மேக்ஸ் பிரைமோ!
நிறைய மல்டி மீடியா மொபைல்களை கொடுத்து இருக்கிறது மேக்ஸ் நிறுவனம். அந்த வகையில் புதிய மல்டி மீடியா மொபைலை அறிமுகம் செய்துள்ளது மேக்ஸ்.

பிரைமோ எம்எக்ஸ்-428 என்ற பெயரில் இந்த புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது மேக்ஸ். நிறைய மொபைல்களில் பேட்டரி நீடித்து வருவதில்லை. இதனால் எத்தனை தொழில் நுட்பங்கள் இருந்தாலும் அதை சரிவர பயன்படுத்த முடிவதில்லை.

இதை மனதில் கொண்டு பேட்டரியில் கவனம் செலுத்தி இருக்கிறது மேக்ஸ் நிறுவனம். இந்த பிரைமோ எம்எக்ஸ்-428 மொபைலில் 30 நாட்கள் ஸ்டான்-பை டைம் அளிக்கக் கூடிய 1,800 எம்ஏஎச் ஆற்றல் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மேக்ஸ் நிறுவனத்தின் எம்எக்ஸ் சிரீஸ் மொபைல்கள் எல்லாமே சிறந்த பேட்டரியை வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மொபைல் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளது. கிங் மூவி ப்ளேயர், மீடியா ப்ளேயர், டியூவல் லெட் டார்ச் போன்ற வசதிகளையும் பெறலாம்.

ஜிபிஆர்எஸ் வசதியின் மூலம் வாடிக்கையாளர்களால் பிரவுசிங் செய்யவும் முடியும். இதன் எக்ஸ்டர்னல் மெமரி 8ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். தகவல்கள் பதிவேற்றம் செய்ய இருக்கவே இருக்கிறது புளூடூத் வசதி. மேக்ஸ் எம்எக்ஸ்-428 பிரைமோ மொபைலை ரூ.2,100 எளிதாக பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X