Home
Mobile

மேக்ஸ் எம்எஸ்-727 மற்றும் மைக்ரோமேக்ஸ் எக்ஸ்- 222-ஒப்பீட்டு அலசல்!

By Super
மேக்ஸ் எம்எஸ்-727 மற்றும் மைக்ரோமேக்ஸ் எக்ஸ்- 222-ஒப்பீட்டு அலசல்!
மேக்ஸ், மைக்ரோமேக்ஸ் இரண்டுமே மக்கள் மத்தியில் சிறந்த பெயர் பெற்ற நிறுவனம்.மேக்ஸ் எம்எஸ்-727, மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-222 என்ற இந்த இரண்டு ஹேண்செட் மாடல்களுமே டியூவல் வசதி கொண்டது.மேக்ஸ் எம்எஸ்-727 பார்ப்பதற்கு நீளமாகவும், கவர்கின்ற வகையிலும் இருக்கிறது.மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-222 மாடல் சிறியதாகவும்,அழகாகவும் இருக்கிறது.

இரண்டு மாடல்களிலுமே ஜிஎஸ்எம் நெட்வொர்க்கை சப்போர்ட் செய்கிறது. 2.4 இஞ்ச் திரை வசதி மற்றும் 240 X 320 பிக்ஸல் ரிசல்யூஷன் கொண்டது. மேக்ஸ் எம்எஸ்-727 மாடலில் க்யூவிஜிஏ டச் ஸ்கிரீன் வசதி கொண்டுள்ளது. இதனை கையாள்வது மிகவும் எளிது.

மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-222 மாடலில் 0.3 மெகா பிக்செல் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேக்ஸ் எம்எஸ்-727 மொபைல் 1.3 மெகா பிக்ஸல் மற்றும் 1280 X 1024 பிக்ஸல் வசதி கொண்டதாக உள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் சூம் வசதியினையும் பெற முடியும்.

வாடிக்கையாளர்களின் பொழுது போக்கிற்காகவே இதில் அனைத்து பார்மெட்டுகளையும் சப்போர்ட் செய்யும் ஆடியோ மற்றும் வீடியோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல்களில் எஃப்எம் ரேடியோ வசதியும் உண்டு. இரண்டு போன்களிலுமே விருப்பமான விஷயங்களை இதில் உள்ள தொழில் நுட்ப வசதியின் மூலம் எளிதாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.

மேக்ஸ் எம்எஸ்-727, மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-222 மாடல்களில் இ-மெயில் வசதி கிடையாது. ஆனால் எஸ்எம்எஸ், எம்எம்எஸ் போன்ற வசதிகளைப் பயன்படுத்த முடியும். புளூடூத் வசதியும் இருக்கிறது.

இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலுமே 2 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி உள்ளது. இதனால் இதன் மெமரி வசதியை 8 ஜிபி வரைப் பெற முடியும். சிறப்பான பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் பேச்சும், வேலையும் துண்டிக்கப்படாமல் தொடரும்.

மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-222 மாடலின் விலை ரூ.2,500. மேக்ஸ் எம்எஸ்-727 மாடலின் விலை ரூ.3,350 இருக்கும் என்ற விலைகளில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X