ரூ.3,200 க்கு மொபைல் வாங்கினால் ரூ.2,500 மதிப்புடைய 'ஷூ' ப்ரீ!

Posted By: Staff
ரூ.3,200 க்கு மொபைல் வாங்கினால் ரூ.2,500 மதிப்புடைய 'ஷூ' ப்ரீ!
வாடிக்கையாளர்களுக்கு இன்னும் டச் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் மேல் உள்ள மோகம் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தினம் தினம் புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அத்தனை டச் ஸ்கிரீன் வசதி கொண்ட மொபைல்களும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று கொண்டு தான் இருக்கிறது.

மேஸ்ட்ரோ என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது மேக்ஸ் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் 3.2 இஞ்ச் தொடுதிரை வசதியை கொண்டுள்ளது. இதில் டியூவல் கேமரா வசதியும் உள்ளதால், கேமரா பற்றிய கவலை வேண்டியதே இல்லை. மல்டி மீடியா வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகா பிக்ஸல் கேமராவும், விஜிஏ முகப்பு கேமராவும் உள்ளது. ப்ரீ-லோடட் செய்யப்பட்ட சோஷியல் நெட்வொர்கிங் அப்ளிக்கேஷன்களையும் இதில் பயன்படுத்த முடியும்.

மிக மெலிதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருப்பதால் கையில் வைத்திருக்கும் ஆசை அதிகமாகி கொண்டுதான் போகுமே தவிர, கையாள்வதில் எந்தவிதமான சிரமும் ஏற்படாது. 1,000 எம்ஏஎச் பேட்டரியை பெற்றுள்ள இந்த

மொபைல், ஜிபிஆர்எஸ் மற்றும் எப்எம் ரேடியோ வசதியினையும் தரும். இந்த மொபைலை வாங்கினால் ஒரு இலவசம் காத்திருக்கிறது.

ரூ.2,500 மதிப்புள்ள ரீபக் ஷூ முற்றிலும் இலவசமாக கிடைக்கும். இது ஒரு வித்தியமான இலவசம் என்று கூறலாம்.

ஏனெனில் பொதுவாக மொபைலை வாங்கினால், அதற்கு மொபைல் அக்சசரீஸ், அப்ளிக்கேஷன் போன்றவைகள் தான் இலவசமாக கிடைக்கும். ஆனால் இந்த மொபைலுக்கு அதிக மதிப்புள்ள ரீபக் ஷூ இலவசமாக கிடைக்க இருக்கிறது. இத்தகைய இந்த மேக்ஸ் மேஸ்ட்ரோ மொபைல் ரூ.3,200 ஒட்டிய விலையில் கிடைக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot