மலிவு விலையில் இரட்டை திரையுடன் வரும் மேக்ஸ் மொபைல்போன்

அது மட்டும் அல்லாது அனைவரின் மனதிலும் ஒரு தனி இடத்தைப் பெறப் போகும் மொபைல் இது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் டியூவல் சிம் வசதி, டியூவல் கேமரா வசதி போன்றவற்றைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் டியூவல் திரை என்ற விஷயம் வாடிக்கையாளர்களுக்கு கேட்பதற்கு கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கும். அதனால் இந்த மொபைல் ஒரு தனி இடத்தைப்பிடிக்கும் என்றும் கூறலாம். இது டியூவல் திரை வசதி கொண்ட மொபைல். இதில் டிஎப்டி திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேக்ஸ் டிட்டோ எம்எக்ஸ்-222 மொபைல் டியூவல் கேமரா வசதியையும் கொண்டுள்ளது. இந்த கேமரா 1.3 மெகா பிக்ஸல் கொண்டது. நண்பர்களிடம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இமோட்டாக் என்ற அப்ளிக்கேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இது போல் இன்னும் நிறைய அப்ளிகேஷன்கள் இதில் உள்ளன.
இதில் 2ஜிபி வரை மெமரி வசதி உள்ளது. மல்டி ஃபார்மெட் பைல்களுக்கு சப்போர்ட் செய்ய இதில் மீடியா பிளேயர் வசதியும் உள்ளது. இனிமையான பொழுதுகளில் கேட்டு மகிழ எப்எம் ரேடியோ வசதியும் கொண்டது இந்த மொபைல். இதன் தொழில் நுட்பத்தின் மூலம் டபிள்யூஏபி பிரவுசர் பயன்பாட்டினையும் பெற முடியும். கூடுதலாக ஏ2டிபி புளூடூத் வசதியும் உள்ளது.
மேக்ஸ் டிட்டோ எம்எக்ஸ்-222 மொபைலில் 800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் சிகப்பு மற்றும் நீலம் கலந்த நிறத்திலும், சிகப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மொபைலின் விலை ரூ.3,788. ஆனால் விற்பனைக்கு வந்த பிறகு இதன் விலை அதிகமாகலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications