வாங்குன இந்த ஸ்மார்ட்போன் வாங்கனும்-இப்படிக்கு ஒன்பிளஸ்.!

இந்தியாவில் 8 நகரங்களில் சுமார் 10 இடங்களில் ஒன்பிளஸ் 6டி பாப்-அப்ஸ் நிகழ்வுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ஒன்பிளஸ் ரசிகர்கள் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வரிசையில் நின்று கைப்பற்றினர்

|

ஒன்பிளஸ் நிறுவனம் அன்மையில் புதிய ஒன்பிளஸ் 6டி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி செலவை விட விளம்பர செலவு தான் அதிகம் போல, அந்த அளவுக்கு இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை
விளம்பரப்படுத்தியுள்ளனர் ஒன்பிளஸ் நிறுவனம். அதேசமயம் விளம்பரத்துக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் நல்ல வன்பொருள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப அம்சத்துடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாங்குன இந்த ஸ்மார்ட்போன் வாங்கனும்-இப்படிக்கு ஒன்பிளஸ்.!

கடந்த 2-ம் தேதி இந்த ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள முக்கிய 9நகரங்களில் அதிகளவு ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இன்று வரை அதிகளவில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது என்று அந்நிறுவனம் சார்பாக தகவல் வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும் அதிக வாடிக்கையாளர்கள் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று தான் தெரிகிறது.

சிறப்பு பரிசுகள்

சிறப்பு பரிசுகள்

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில சிறப்பு பரிசுகளை அறிவித்துள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி டி-சர்ட், OnePlus tote bags போன்ற பல்வேறு சிறப்பு பரிசுகளை அறிவித்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். குறிப்பாக
இயக்கதற்கு மிக அருமையாக இருக்கும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல். பின்பு ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு வேண்டி பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி கொண்டு இருக்கிறது இந்நிறுவனம்.

 பெங்களூரு

பெங்களூரு

இந்தியாவில் 8 நகரங்களில் சுமார் 10 இடங்களில் ஒன்பிளஸ் 6டி பாப்-அப்ஸ் நிகழ்வுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ஒன்பிளஸ் ரசிகர்கள் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வரிசையில் நின்றுகைப்பற்றினர். சில இடங்களில் ஒன்பிளஸ் 6டி மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக பெங்களூருவில் ஒன்பிளஸ் ஸ்டோர் முன்பு அதிக
ரசிகர்கள் வரிசையில் நின்று இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை

சென்னை

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு பல கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து வாங்கிச் சென்றுள்ளனர், அதன்படி ஒரு 62 வயதான ஒன்பிளஸ் ரசிகர் அவரது சொந்த ஊரிலிருந்து சென்னை பாப்-அப்கள் நிகழ்ச்சியில் கான 250 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்துள்ளார், இவற்றின் மூலம் ஒன்பிளஸ் தயாரிப்புகளுக்கான ஆர்வத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம்

8ஜிபி ரேம்

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு ஒரு வேரியண்டாகவும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட இன்னொரு வேரியண்டாகவும் மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட இன்னொரு வேரியண்டாகவும் களமிறங்கியுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் 6டி மாடல் ஸ்மார்ட் போன் இல் 64 ஜிபி வேரியண்ட் மாடல் கிடையாது என்பதும், ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்டியலில் இருந்து 64 ஜிபி வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனிச் சிறப்பு:

தனிச் சிறப்பு:

ஒன் பிளஸ் 6டி சிறந்த ஸ்னாப்டிராகன் 845 சிபியூ புரோசர், 4 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் இருக்கின்றுது. 3700 எம்ஏஹெச் பேட்டரியும் இருகின்றது. ஒன் பிளஸ் 6டி அதிக நேரம் கேம் விளையாடவும் முடியும். இந்த ஒன்பிளஸ் 6டியில் ஏராளமான செயல் திறன்களும் அடங்கியுள்ளன. பிக்சல் ஸ்மார்ட் போனாவும் இருக்கின்றது. மேம்படுதத்தபட்ட சைகை ஊடுருவல், நீண்ட கால பேட்டரி, புதிய தகவமைப்பு, சிறந்த மெமரி மேலாண்மை, யூஐன் சிறப்பான உள்ளுணர்வு, மேலும் ஆக்ஸிஜன் ஓஎஸ் பதிப்பும் இருக்கின்றது.

பொது மேலாளர் அகர்வால் கூறியதாவது-நாம் ஒன்பிளஸ் சாதனத்தை தொடர்ந்து வழங்கி வருகின்றோம். தற்போது கின்னஸ் சாதனை முயற்சியில் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இந்த ஒன்பிளஸ் 6டியை வெளியிட்டு சாதனை செய்தது ஒரு சந்தர்ப்பம். நூற்றுக்கணக்கான சமூக உறுப்பினர்கள் இந்த மகத்தான சாதனை நிறைவேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Best Mobiles in India

English summary
Massive queues at Pop-ups event show OnePlus rules the smartphone market: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X