ரூ.21,000 தள்ளுபடியில் iPhone 14.. இதுவே முதல் முறை.. மிஸ் பண்ணா கிடைக்காது!
அட்சய திரிதியை முன்னிட்டு ஐபோன் 14 (iPhone 14) மீது நம்பமுடியாத ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் மூலம் ஆப்பிள் பிரீமியம் ரீசெல்லரான மேப்பிள் ஸ்டோரில் ரூ.21,000 தள்ளுபடியில் ஐபோன் 14-ஐ வாங்கிக் கொள்ள முடியும். எப்படி வாங்குவது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவின் ஆப்பிள் பிரீமியம் ரீசெல்லர்களில் ஒன்றான மேப்பிள் ஸ்டோரில் அட்சய திருதியையை முன்னிட்டு அதிரடி ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐபோன் 14 போனுக்கு ரூ.21,000 தள்ளுபடி மற்றும் நோ-காஸ்ட் இஎம்ஐ ( No cost EMI ) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் பிரியர்களுக்கு ஐபோன் 14 சீரிஸ் மிகவும் பிடித்தமானதாக உள்ளது. இந்த போனை வாங்குவதற்கு சரியான நேரம் வந்துவிட்டது.

ஐபோன் 14 512 ஜிபி வேரியண்ட்டின் விலை மார்கெட்டில் ரூ. 1,09,900 ஆக உள்ளது. இருப்பினும், அமேசான் ( Amazon ), பிளிப்கார்ட் ( Flipkart ) போன்ற தளங்களில் ஆஃபர்களுடன் கிடைக்கிறது. இந்த ஆஃபர்களை அள்ளி சாப்பிடும் வகையில், ஆப்பிள் பிரீமியம் ரீசெல்லரான மேப்பிள் ஸ்டோரில் (Apple Premium Reseller Maple Store) ரூ. 21,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மேப்பிள் ஸ்டோரின் அட்சய திரிதியை தள்ளுபடி ரூ.11,000, எச்டிஎஃப்சி வங்கி கேஷ்பேக் ( HDFC Bank Cash Back ) ரூ. 4,000, எக்ஸ்சேஞ்ச் போனஸ் (Exchange Bonus ) ரூ. 6,000 என மொத்தமாக ரூ. 21,000 தள்ளுபடியை பெற முடியும். அதேபோல ஐபோன் 14 128 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியண்ட்டுகளுக்கும் 10 சதவீதம் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் ஐபோன் 14 போனின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் பஜாஜ் பின்சர்வ் (BAJAJ FINSERV), எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank), ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) ஆகியவை 24 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ ( No cost EMI ) சலுகையை வழங்குகின்றன. இந்த சலுகையை முன்பணம் செலுத்தாமல் பெற்றுகொள்ள முடியும். மாதம் ரூ. 2,996 செலுத்தினால் போதும். இந்த ஆஃபர் சில நாட்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. வாங்க விருப்பமுள்ளவர்கள் உடனடியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஐபோன் 14 சிறப்பம்சங்கள்: ஐபோன் 14 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ஏ15 பயோனிக் (A15 Bionic) சிப்செட் கொண்டுள்ளது. 12 எம்பி டூயல் ரியர் கேமரா உள்ளது. அதேபோல 12 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உடன் கிடைக்கிறது. 3279 mAh பேட்டரி 12.68 வாட்ஸ் வயர்டு மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உடன் வருகிறது.
மிட்நையிட் (Midnight) , பர்பிள் (Outside) , ஸ்டார்லைட் Starlight) , ப்ளூ ( Blue), ரெட் ( Red ), யெல்லோ (Yellow) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. விலையை பொறுத்தவரையில் ஐபோன் 14 128 ஜிபி ரூ. 71.999 ஆகவும், 256 ஜிபி விலை ரூ. 81,999 ஆகவும், 512 ஜிபி விலை ரூ.101,999 ஆகவும் உள்ளது. இவற்றை மேப்பிள் ஸ்டோரில் தள்ளுபடி விலையில் வாங்கிங்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








