Home
Mobile

மே மாசம் ஆரம்பமே இப்படியா.. பல போன்களின் விலை ரூ.6000 வரை உயர்வு.. OnePlus, Nothing, Redmi, Realme-னு எல்லாம்!

ஒன்பிளஸ் (OnePlus), ரெட்மி (Redmi), நத்திங் (Nothing) மற்றும் ரியல்மி (Realme) ஆகிய 4 நிறுவனங்களுமே, இந்தியாவில் விற்பனையாகும் தங்களின் மிட்-ரேன்ஜ் மற்றும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏன் தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்படுகின்றன? ஸ்மார்ட்போன் துறையானது - உதிரிபாகங்களின், குறிப்பாக டிரேம் (DRAM( மற்றும் என்ஏஎன்டி (NAND( போன்ற மெமரி மற்றும் ஸ்டோரேஜ் ஸ்டிக்குகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கிணங்க விலை உயர்வுகளை அறிவித்து வருகிறது.

பல போன்களின் விலை ரூ.6000 வரை உயர்வு.. OnePlus, Nothing, Redmi, Realme

ஏஐ (AI) ஆனது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பயன்பாட்டிற்குள் வந்துள்ளதால், டெக் நிறுவனங்கள் தங்களின் டேட்டா சென்டர்களுக்காக அதிக எண்ணிக்கையிலான ரேம் மற்றும் ஜிபியு சிப்களை வாங்க வருகின்றன. இதன் விளைவாக, ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் முக்கிய உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், ரேம் உற்பத்தியாளர்கள் அதிக அலைவரிசை கொண்ட மெமரி ஸ்டிக்குகளை உற்பத்தி செய்வதில் தங்கள் கவனத்தை திருப்பி, செயற்கை நுண்ணறிவு துறையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக விநியோகத்தை திசை திருப்பியுள்ளனர். இது உலகளவில் அனைத்து மாடல்களின் விலைகளையும் உயர்த்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களை கட்டாயப்படுத்தியுள்ளது.

எந்தெந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன? ஒன்பிளஸ் நிறுவனம் தனது இணையதளத்தில் ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் மாடல்களுக்கான புதிய விலைகளை புதுப்பித்துள்ளது. இந்தியாவில் ரூ.72,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 15, தற்போது நிறுவனத்தின் இணையதளத்தில் ரூ.77,999 க்கு (12GB + 256GB) பட்டியலிடப்பட்டுள்ளது.

இதே ஸ்மார்ட்போனின் 16GB + 512GB ஆப்ஷன் இப்போது ரூ.85,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது, அதன் அறிமுக விலையான ரூ.79,999-ஐ விட ரூ.6,000 அதிகம் ஆகும். மறுபுறம், ஒன்பிளஸ் 15ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணையதளத்தின்படி, 12GB + 256GB உடன் வரும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.50,499-இலிருந்து ரூ.52,999 ஆக உயர்ந்துள்ளது. இது, அதன் அறிமுக விலையான ரூ.47,999-இலிருந்து ரூ.5,000 அதிகமாகும். அதே நேரத்தில் 12GB + 512GB ஆப்ஷனின் விலை ரூ.52,999-இலிருந்து ரூ.57,999 ஆக உயர்ந்துள்ளது.

எந்தெந்த நத்திங் ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன? எக்ஸ் தளத்தில் வெளியான ஒரு பதிவில், டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரி, நத்திங் 4ஏ ப்ரோ மற்றும் நத்திங் 4ஏ ஆகியவை ஸ்மார்ட்போன்கள் இனி முறையே ரூ.44,999 மற்றும் ரூ.31,999 என்ற ஆரம்ப விலைகளில் விற்பனைக்கு வரும் என்று கூறியுள்ளார்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மார்ச் 5 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது, ​​8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸிக் வேரியண்ட் முறையே ரூ.39,999 மற்றும் ரூ.31,999 என்ற ஆரம்ப விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டன. இப்போது இரண்டுமே விலை உயர்த்தப்பட்டு உள்ளன.

எந்தெந்த ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன? இதேபோல், ஷாவ்மீயின் துணை பிராண்ட் ஆன ரெட்மியும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸின் விலைகளை உயர்த்துவதாக கூறப்படுகிறது. ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ், அறிமுக விலையான ரூ. 37,999-க்கு பதிலாக ரூ.39,999-க்கு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மறுபுறம், ரெட்மி நோட் 15 ப்ரோவின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.29,999-லிருந்து ரூ. 31,999-ஆக உயர்த்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எந்தெந்த ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன? இறுதியாக, ரியல்மி நிறுவனமும் இந்தியாவில் பல ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தியுள்ளதாக டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (@yabhishekhd) கூறுகிறார். ரியல்மி 16 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன், அறிமுக விலையான ரூ.39,999-லிருந்து அதிகரித்து, இனி ரூ.44,999-க்கு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், ரியல்மி 16 ப்ரோவின் விலை இப்போது ரூ.36,999-லிருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. அறிமுக விலையான ரூ.31,999-க்கு பதிலாக ரூ.36,999 என்கிற விலை உயர்வானது ரூ.5,000 விலை அதிகரிப்பை குறிக்கிறது.

Best Mobiles in India

English summary
Many OnePlus Nothing Redmi Realme Smartphones Price Increased in India Check Old and New Pricing
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X