லீஇகோவின் தீபாவளி தள்ளுபடி : இது அதிரடி தள்ளுபடி!
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் லீஇகோ நிறுவனம் தனது பயனர்களுக்குத் தீபாவளி பரிசுகளைச் சலுகை மற்றும் தள்ளுபடி வடிவில் வழங்குகின்றது. பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகை மற்றும் தள்ளுபடிகளின்
லீஇகோவின் சொந்த ஆன்லைன் விற்பனை தளமான லீமால்.காம் "LeMall For All" விற்பனை திருவிழாவினை மீண்டும் துவங்கியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான லீஇகோ பொருட்களை சலுகை விலையில் வாங்க முடியும். ஏற்கனவே லீஇகோ கருவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் காட்டிலும் இம்முறை அதிகப்படியான தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை "LeMall For All" விற்பனை திருவிழாவானது தீபாவளி சிறப்பு விற்பனையை வழங்குகின்றது. இதில் பயனர்கள் அதிகப்படியான தள்ளுபடி மப்பும் சலுகைகளை வழங்குகின்றது. ஏற்கனவே லீஇகோ நிறுவனத்தின் கருவிகள் அதிகப்படியான விற்பனையைச் சந்தித்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகையில் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருமளவு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

கருவிகள்
லீஇகோ சூப்பர்போன், சூப்பர் டிவி மற்றும் பிரத்தியேக கருவிகளை பனர்கள் இதுவரை இல்லாத விலையில் வாங்கிட முடியும். மேலும் பயனர்கள் ரூ.1,49,790 மதிப்புடைய லீஇகோவின் அல்ட்ரா-பிரீமியம் Max65 3D ஸ்மார்ட் டிவியினை வென்றிடும் வாய்ப்புகளும் இருக்கின்றது. இந்த விற்பனையைப் பயன்படுத்தி பயனர்கள் லீ மேக்ஸ்2 கருவிக்கு ரூ.5000/- வரையிலும், லீ 2 கருவிக்கு ரூ.1,000/- வரை தள்ளுபடியினைப் பெற முடியும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வங்கிச் சலுகை
ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் / டெபிட் கார்டு பயனர்கள் சுமார் 10 சதவீதம் வரை கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் லீஇகோவின் லீகேர் ப்ரோடெக்ஷன் பிளான் இலவசமாக வழங்கப்படுகின்றது. இதனால் சூப்பர்போன் கருவிகளுக்கு விபத்து மற்றும் தண்ணீர் மூலம் பாதிப்படைந்தால் வீட்டிற்கே வந்து சரி செய்திடும் வசதி வழங்கப்படுகின்றது.

ஆடியோ
சூப்பர்போன் கருவிகள் இல்லாமல் ஆடியோ பொருட்களுக்கும் லீமால் அதிகப்படியான சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் சுமார் 20 முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். ப்ளூடூத் ஸ்பீக்கர், ப்ளூடூத் ஹெட்போன் மற்றும் அனைத்து மெட்டல் இயர்போன்களுக்கும் முறையே ரூ.500, ரூ.750 மற்றும் ரூ.250 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தள்ளுபடி
மேலும் ரிவர்ஸ் இன்-இயர் ஹெட்போன், கேஸ், கவர்கள் மற்றும் ரிங் பிராக்கெட்களை வாங்கும் பயனர்களுக்கு ரூ.200 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

சூப்பர் டிவி
லீஇகோ சூப்பட் டிவி கருவிகளை ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் / டெபிட் கார்டு பயனர்கள் ரூ.4000 வரை கேஷ்பேக் மற்றும் 12 மாதங்களுக்கு வட்டியில்லா தவணை முறை வசதியும் பெற முடியும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தவணை முறை
இதனால் லீஇகோவின் சூப்பர்3 x55 மாடல் சூப்பர் டிவியினை 4 ஆண்டு பேனல் வாரண்டி மற்றும் 2 ஆண்டு டிவி சந்தா உள்ளிட்டவற்றை மாதம் ரூ.4,979 என்ற தவணை முறையில் வாங்கிட முடியும். இதில் வட்டியில்லா தவணை முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

லீமால்
சீனாவில் 2013ஆம் ஆண்டு லீமால் துவங்கப்பட்டது. லீஇகோ நிறுவனத்தின் சொந்த ஆன்லைன் விற்பனை தளமான லீமால் இந்தியா இல்லாமல் அமெரிக்கா, ஹாங் காங் போன்ற இடங்களிலும் பிரபமானதாகும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications