யோசிக்காம வாங்குவீங்க.. 64எம்பி கேமரா, OLED டிஸ்பிளே.. இந்தியாவுக்கு வரும் புது Honor போன்.. பட்ஜெட் விலை..
ஹானர் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே ஹானர் நிறுவனம் மாதவ் சேத் (Madhav Sheth) தலைமையில் ஹானர் பேட் எக்ஸ் (Pad X9) இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இந்நிலையில் புது ஹானர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம். இந்த புது போனின் டீசரை சமீபத்தில் மாதவ் சேத் வெளியிட்டுள்ளார். இணையதளத்தில் வெளியான தகவலின்படி ஹானர் எக்ஸ்9ஏ ஸ்மார்ட்போன் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளது.குறிப்பாக இது 5ஜி போன் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் மேம்பட்ட அம்சங்களுடன் அசத்தலான வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ட்ரிபிள் ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய டிஸ்பிளே, தரமான பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9ஏ ஸ்மார்ட்போன். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஹானர் எக்ஸ்9ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது ஹானர் எக்ஸ்9ஏ ஸ்மார்ட்போன் வட்ட வடிவ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் 64எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
குறிப்பாக இந்த போனின் செல்பி கேமரா உதவியுடன் 1080p வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் இதன் பின்புற கேமராக்கள் நைட் மோட் (night mode), போர்ட்ரெய்ட் மோட் (portrait mode), எச்டிஆர் (HDR), டைம் லேப்ஸ் (time-lapse), சூப்பர் மேக்ரோ (super macro) மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது. அதேபோல் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் இந்த ஹானர் எக்ஸ்9ஏ போன் அறிமுகமாகும்.
ஹானர் எக்ஸ்9ஏ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் (Snapdragon 695 chipset) உடன் அட்ரினோ 619 ஜிபியு ( Adreno 619 GPU) ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டு இந்த புத்தம் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹானர் எக்ஸ்9ஏ ஸ்மார்ட்போனில் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி (FHD+ OLED) வளைந்த டிஸ்பிளே வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் ( 300Hz touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

5100எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஹானர் எக்ஸ்9ஏ ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் 40 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9ஏ ஸ்மார்ட்போன்.
ஹானர் எக்ஸ்9ஏ ஸ்மார்ட்போனில் வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.1 உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவரும். மேலும் இந்த ஹானர் எக்ஸ்9ஏ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








