வீட்டுக்கு 4 வாங்குவாங்களே.. ரூ.5000 க்கு ஸ்மார்ட்போன்.. Realme முன்னாள் CEO-வின் புது கம்பெனி அதிரடி!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு புதிய மொபைல் பிராண்ட் வரவிருக்கிறது. அது ஏஐ பிளஸ் (Ai+) ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆகும். இது ரியல்மி இந்தியாவின் (Realme India) முன்னாள் சிஇஓ-வான மாதவ் ஷெத் (Madhav Sheth) தலைமையிலான நெக்ஸ்ட்குவாண்டம் ஷிஃப்ட் டெக்னாலஜிஸ் (NxtQuantum Shift Technologies) நிறுவனத்தின் ஒரு பகுதியாகும்.
ஏஐ பிளஸ் என்கிற இந்த புதிய நிறுவனத்தின் கீழ், வருகிற ஜூலை 8, 2025 அன்று இந்தியாவில் அதன் முதல் மற்றும் முதன்மை டிவைஸ்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஏஐ பிளஸ்-ன் கீழ் அறிமுகம் செய்யப்படும் தயாரிப்புகள் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) வழியாக பிரத்யேக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஏஐ பிளஸ் நிறுவனம் ஆனது ரூ.5000 விலை நிர்ணயத்தை கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது; அதுவும் ஸ்மார்ட் செயல்பாடுகள் மற்றும் மால்வேர்கள் இல்லாத ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது; ஏஐ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
வருகிற ஜூலை 8 ஆம் தேதி என்னென்ன ஏஐ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்? மாதவ் ஷெத் தலைமையிலான இந்நிறுவனம் வருகிற ஜூலை 8 ஆண்டு நோவா 5ஜி (Nova 5G) மற்றும் பல்ஸ் 4ஜி (Pulse 4G) என்கிற 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.

நோவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6என்எம் யுனிசாக் டி8200 ( 6nm Unisoc T8200) சிப்செட் மூலம் இயக்கப்படும். மேலும் இது டூயல் 50எம்பி கேமராக்கள், 5000mAh பேட்டரி மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி ஆகிய முக்கிய அம்சங்களையும் கொண்டிருக்கும். நோவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்படலாம் மற்றும் Black, Blue, Green, Pink அல்லது Purple ஆகிய கலர்களில் வெளியாகலாம்.
மறுகையில் உள்ள பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது "அவ்வளவு சக்திவாய்ந்ததாக இல்லாத" 12 என்எம் யுனிசாக் டி7250 (12nm Unisoc T7250) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது சிப்செட்டில சிறிது சமரசம் செய்தாலும் கூட இது நோவா 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள அதே கேமரா மற்றும் பேட்டரியை வைத்திருக்கிறது.

நோவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வட்ட வடிவிலான கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது செவ்வக வடிவிலான கேமராஸ் செட்டப்பை பேக் செய்கிறது. இது மட்டுமே இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையேயான "காட்சி மாறுபாட்டை" வழங்குகிறது. மீதமுள்ள வடிவமைப்பு எல்லாம் ஒரே மாதிரியே உள்ளன.
மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 15 (Android 15) ஓஎஸ்-இன் இந்தியமயமாக்கப்பட்ட வேரியண்ட் ஆன நெக்ஸ்ட் குவாண்டம் ஓஎஸ் (NxtQuantum OS) கொண்டு இயங்குகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த எளிதான, ப்ளோட்டிங் இல்லாத மற்றும் ஏஐ கொண்டு இயங்கும் நுண்ணறிவு அம்சங்களும் இடம்பெறும்.
மேலும் பயனர்களின் தகவல்கள் MeitY ஆல் சான்றளிக்கப்பட்ட Google Cloud சேவையகங்களில் பாதுகாப்பாக சேமிக்கப்படும் என்று ஏஐ பிளஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது மட்டுமின்றி, "ஓரளவு" மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஆகையால் மேக் இன் இந்தியா இயக்கத்துடன் இணைகிறது
ஏஐ பிளஸ் நிறுவனம் ஆனது புதிய ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி வேர்பட்ஸ் வாட்ச் 3 என்கிற புதிய தயாரிப்பையும் அறிமுகம் செய்யவுள்ளது. இது பில்ட் இன் TWS இயர்பட்களைக் கொண்ட ஒரு ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இதுவும் பட்ஜெட் விலையில் தான் அறிமுமாகும். ஏனென்றால் ஏஐ பிளஸ் நிறுவனம் ஆனது அதன் முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவு விலையில் மாற்றுவதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications