Google ஆண்டவரின் 'ஓவர் கான்ஃபிடென்ஸ்'.. நம்மல நம்பித்தான் இறங்குறாரு!

|

உங்களுக்கு தெரிந்த யாரேனும் கூகுள் பிக்சல் (Google Pixel) ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறார்களா? என்று கேட்டால்.. 100 க்கு 90 பேர் "இல்லை" என்கிற பதிலையே சொல்லுவார்கள்!

அவ்வளவு ஏன்? கடைசியாக எப்போது ஒரு கூகுள் பிக்சல் போனை "நேரில்" பார்த்தீர்கள் என்று கேட்டால் கூட.. பலரிடம் சரியான பதில் இருக்காது!

இப்படிப்பட்ட சூழ்நிலையில்..!

இப்படிப்பட்ட சூழ்நிலையில்..!

பெரிய அளவில் பிரபலம் இல்லாத ஒரே காரணத்தினால் பிக்சல் போன்களை "மொக்கை" என்றும் கூறிவிட முடியாது. யூஸர் இன்டர்பேஸ், ஓஎஸ் அப்டேட், பெர்ஃபார்மென்ஸ், கேமரா செயல்திறன் என்று வந்துவிட்டால் 100-க்கு 99 போன்கள் கூகுள் பிக்சலிடம் தோற்றுப்போகும்.

இருந்தாலும் கூட, பிக்சல் போன்கள் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கூகுளின் அடுத்த பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்திற்கு தயாராகி உள்ளன!

(முன்குறிப்பு: இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களில் உள்ளது, பிக்சல் 6 சீரீஸ் மாடல்கள் ஆகும்; பிக்சல் 7 சீரீஸ் மாடல்கள் அல்ல)

அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான்; எப்படியோ நமக்கு ரொம்ப வசதியா போச்சு!அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான்; எப்படியோ நமக்கு ரொம்ப வசதியா போச்சு!

அது Pixel 7 சீரீஸ் மாடல்கள் ஆகும்!

அது Pixel 7 சீரீஸ் மாடல்கள் ஆகும்!

கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

நினைவூட்டும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த Google I/O-இல் கூகுள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோவின் "வாரிசுகள்" விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூகுள் டீஸ் செய்து இருந்தது. தற்போது அந்த அறிமுகம் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிமுகமாக போவது பிக்சல் போன்கள் மட்டுமல்ல!

அறிமுகமாக போவது பிக்சல் போன்கள் மட்டுமல்ல!

ஆம்! கடந்த மே மாதத்தில் கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் போன்களை மட்டுமே டீஸ் செய்யவில்லை. இன்னொரு தயாரிப்பையும் சேர்த்தே டீஸ் செய்தது.

அது கூகுள் பிக்சல் வாட்ச் ஆகும். இதுவும் வரவிருக்கும் மேட் பை கூகுள் (Made by Google) நிகழ்வில் அறிமுகமாகும்.

SharkBot அலெர்ட்! சிக்கிடீங்கனா.. வங்கிகளால் கூட ஒன்னும் செய்ய முடியாது!SharkBot அலெர்ட்! சிக்கிடீங்கனா.. வங்கிகளால் கூட ஒன்னும் செய்ய முடியாது!

Google Pixel 7 மற்றும் Pixel 7 Pro-வில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

Google Pixel 7 மற்றும் Pixel 7 Pro-வில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

கூகுள் Pixel 7 மற்றும் Pixel 7 Pro ஸ்மார்ட்போன்கள் ஆனது (கடந்த Google I/O-இல் அறிமுகமான) நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை டென்சர் SoC-களால் இயக்கப்படும் மற்றும் Android 13 ஓஎஸ் இல் இயங்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

கூகுளின் புதிய சிப்செட் ஆனது புகைப்படங்கள், வீடியோக்கள், செக்யூரிட்டி மற்றும் ஸ்பீச் ரிகக்னைசேஷன் போன்றவைகளின் மீதான பெர்சனலைஸ்டு அம்சங்களை வழங்கும் என்றும் கூகுள் கூறுகிறது.

பிக்சல் 7 ப்ரோவின் அன்பாக்சிங் வீடியோ!

பிக்சல் 7 ப்ரோவின் அன்பாக்சிங் வீடியோ!

சில நாட்களுக்கு முன்பு, Gadgetfull BD வழியாக பிக்சல் 7 ப்ரோவின் அன்பாக்சிங் வீடியோ ஒன்றும் வெளியானது.

அதன் வழியாக பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கிளாஸ் பேக், கூகுள் I/O 2022-இல் டீஸ் செய்யப்பட்ட அதே 'வைசர் டிசைன்', அந்த வைசர் டிசைனில் 2 மெட்டல் கட்அவுட்கள் உள்ளன.

முதல் கட்அவுட்டில் இரண்டு கேமராக்கள் உள்ளன, இரண்டாவது கட்அவுட்டில் டெலிஃபோட்டோ கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம் என்பது போல் தெரிகிறது.

பிரீமியம் போன் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டா இந்த 8-ல 1 தான் வாங்கணும்!பிரீமியம் போன் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டா இந்த 8-ல 1 தான் வாங்கணும்!

பிக்சல் 7 சீரீஸின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

பிக்சல் 7 சீரீஸின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

வெண்ணிலா வேரியண்ட் ஆன கூகுள் பிக்சல் 7 ஆனது ரூ.51,999 என்கிற ஆரம்ப விலையின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

மறுகையில் உள்ள ப்ரோ மாடலான பிக்சல் 7 ப்ரோ ஆனது சுமார் ரூ.70,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த இரண்டுமே எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயமே ஆகும்; அசல் விலைகள் முன்பின் இருக்கலாம்!

Google-இன் முதல் ஸ்மார்ட் வாட்ச் - எப்படி இருக்கும்?

Google-இன் முதல் ஸ்மார்ட் வாட்ச் - எப்படி இருக்கும்?

அக்டோபர் 6 ஆம் தேதி நடக்கும் நிகழ்வில் கூகுள் பிக்சல் வாட்ச், அதாவது கூகுள் நிறுவனத்தால், வடிவமைத்து கட்டமைக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்வாட்ச்சும் அறிமுகம் ஆகும்.

இந்த ஸ்மார்ட்வாட்ச் அனைத்து வகையான பிக்சல் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் வேலை செய்யும் மற்றும் நிறுவனத்தின் புதிய WearOS-இன் கீழ் இயங்கும்.

BSNL பயனர்களுக்கு ஒரு பேட் நியூஸ்; இருந்தது ஒன்னு.. இப்போ அதுவும் போச்சு!BSNL பயனர்களுக்கு ஒரு பேட் நியூஸ்; இருந்தது ஒன்னு.. இப்போ அதுவும் போச்சு!

Made by Google நிகழ்வில் வேறு என்னென்ன எதிர்பார்க்கலாம்?

Made by Google நிகழ்வில் வேறு என்னென்ன எதிர்பார்க்கலாம்?

கூகுள் நிறுவனத்தின் US ஸ்டோர் வழியாக கிடைத்த தகவலின்படி, மேட் பை கூகுள் வெளியீட்டு நிகழ்வானது வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும்.

அந்நிகழ்வில் புதிய Google Pixel போன்கள் (அதாவது கூகுள் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ) மற்றும் கூகுள் பிக்சல் வாட்ச் உடன் சேர்த்து நிறுவனம் அதன் புதிய நெஸ்ட் ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளையும் அறிவிக்கும்.

Best Mobiles in India

English summary
Made by Google Event 2022 Pixel 7 Pixel 7 Pro Pixel Watch Launch Date Announced Check Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X