ரூ.4,999/-க்கு எம்-டெக் நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

எம்-டெக் நிறுவனம் இந்தியாவில் அதன் எம்-டெக் டிஇஇசெட்4ஜி (TEZ4G) ஸ்மார்ட்போனை ரூ.4,999/-க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த தொலைபேசி 20,000 சில்லறை கடைகள் உட்பட அமேசான், ஸ்னாப்டீல், ப்ளிப்கார்ட், ஷாப்க்ளூஸ், பேடிஎம் போன்ற பல்வேறு இ-காமர்ஸ் தளங்கள் வழியாக ஆன்லைனில் கிடைக்கும்.

ரூ.4,999/-க்கு எம்-டெக் நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.!

கோல்டன் மற்றும் பிளாக் நிற வகைகளில் அறிமுகமாகியுள்ள இக்கருவி ஒரு 5 அங்குல எப்டபுள்யூவிஜிஏ (FWVGA) உடனான 854 x 480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. 1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் ப்ராஸசர் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிபி ரேம், 8 ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 32 ஜிபி அளவிலான மைக்ரோ எஸ்டி கார்ட் விரிவாக்கம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

ரூ.4,999/-க்கு எம்-டெக் நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.!

தவிர, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயக்க முறைமை கொண்டு இயங்குகிறது. கேமரா துறையை பொறுத்தமட்டில் எல்இடி ஃப்ளாஷ் உடனான ஒரு 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

உடன் இரட்டை சிம், 4ஜி வோல்ட், ப்ளூடூத், வைஃபை, ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ- யூஎஸ்பி, ஜிபிஆர்எஸ் / எட்ஜ் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் வழங்குகிறது. எம்-டெக் டிஇஇசெட்4ஜி ஆனது ஒரு 2400 எம்ஏச் பேட்டரி கொண்டு வருகிறது மற்றும் இது 11 மணி நேர பேச்சு நேரம் மற்றும் 216 மணி நேர காத்திருப்பு நேரம் வழங்குமென்று நிறுவனம் கூறுகிறது.

ரூ.4,999/-க்கு எம்-டெக் நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.!

இந்நிறுவனத்தின் இயக்குனர் கௌதம் குமார் ஜெயின் கூறுகையில் "ஒரு நுகர்வோர் மையமாக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். நுகர்வோர் கொள்முதல் முறைகளை கவனமாக பகுப்பாய்வு செய்ததில் இருந்து செயல்திறன், கடினத்தன்மை, ஸ்டைல் மற்றும் விலை நிர்ணயம் ஆகிய முக்கியமான நான்கு பகுதிகளை பற்றி அறிந்துகொண்டோம். அதை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் - சக்தி வாய்ந்த செயலி, ஆயுள் வழங்கும் பேட்டரி மற்றும் சிறப்பான கேமரா, டிராகன்ட்ரையல் கிளாஸ் பாதுகாப்பு, ஆச்சரியமான வளைந்த வடிவமைப்பு மற்றும் ஓடிஜி ஆதரவு ஆகிய அம்சங்களை எங்கள் சாதனத்தில் இணைத்துள்ளோம். இது நுகர்வோர்களால் நிச்சயமாக நேசிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
M-tech TEZ4G smartphone launched in India for Rs 4,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X