செல்பீ கேமராவுடன் "எக்ஸ்டரா மொபைல்" ஒன்று வேண்டுமா.? அதுவும் ரூ.899/-க்கு.!

|

எம்-டெக், ஒரு மலிவு விலை தொலைபேசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். சமீபத்தில் வெளியாகியுள்ள அந்நிறுவனத்தின் கருவியொன்று மலிவு விலை என்பதையும் மீறி பயனர்களின் தேவைகளை கருத்தில்கொண்டு உருவாக்கம் பெற்றுள்ளது.

எம்-டெக் ஜி24 என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள நிறுவனத்தின் புதிய சாதனம் செல்பீ அம்சத்தில் கவனம் செலுத்துகிறது. ரூ.899/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள இக்கருவி முன்னணி இ-காமர்ஸ் வலைத்தளங்கள் மற்றும் சில்லறை கடைகளில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

இரண்டு டிஜிட்டல் கேமராக்கள்

இரண்டு டிஜிட்டல் கேமராக்கள்

ஜி24 மொபைல் ஆனது 1.8 அங்குல க்யூக்யூவிஜிஏ டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் முக்கிய சிறப்பம்சமே அதன் இரண்டு டிஜிட்டல் கேமராக்கள் தான். ஒரு ரியர் கேமரா மற்றுமொரு செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

1000எம்ஏஎச் பேட்டரி

1000எம்ஏஎச் பேட்டரி

இந்த தொலைபேசி 1000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. இது சுமார் 7 ​​மணி நேர பேச்சு நேரத்தையும், 300 மணி நேர காத்திருப்பு நேரத்தையும் வழங்குமென நிறுவனம் கூறுகிறது. ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் பெங்காலி உட்பட ஐந்து மொழிகளுக்கான ஆதரவை இந்தத் தொலைபேசி வழங்குகிறது.

வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, ப்ளூடூத்

வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, ப்ளூடூத்

எம்-டெக் ஜி24 ஒரு 16ஜிபி அளவிலான மெமரி விரிவாக்க ஆதரவு கொண்டுள்ளது மற்றும் எம்பி3 / எம்பி4 /டபுள்யூஏவி பிளேயர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, ப்ளூடூத், ஆடியோ / வீடியோ பதிவு, ஆட்டோ கால் ரெக்கார்ட்ம போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

4ஜி நெட்வொர்க்கை ஆதரிக்காது

4ஜி நெட்வொர்க்கை ஆதரிக்காது

அதெல்லாம் சரி, இக்கருவியை நம்பி வாங்கலாமா என்ற கேள்வியை எழுப்பினால் - நல்ல பேட்டரி ஆயுளை வழங்குகிறது, செல்பீ கேமரா கொண்டுள்ளது ஆகிய காரணங்களுக்காக வாங்கலாம். மறுகையில் இக்கருவி 4ஜி நெட்வொர்க்கை ஆதரிக்காது, இதில் சமூக ஊடக பயன்பாடுகளை அணுக முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

நோக்கியா 3310 கருவியை போலவே இருகிறது

நோக்கியா 3310 கருவியை போலவே இருகிறது

எம்-டெக் ஜி24 சாதனத்தின் முன்பக்கமும் சரி, பின்பக்க வடிவமைப்பும் சரி, பார்ப்பதற்கு அப்படியே சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 3310 கருவியை போலவே இருகிறது என்பதால் எக்ஸ்டரா மொபைல் ஒன்று வைத்திருக்க விரும்புவார்கள் ஆசைக்கு கூட ஒன்று வாங்கி வைத்துக்கொள்ளலாம், தவறில்லை.!

Best Mobiles in India

English summary
M-tech G24 feature phone with selfie camera launched at Rs 899, but is it worth buying? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X