அஸ்டன் மார்ட்டினின் சொகுசு மொபைல்கள்

சொகுசு மொபைல் தயாரிப்பாளர்களான மொபியாடோ நிறுவனம் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய சொகுசு மொபைல்களை களமிறக்கவிருக்கிறது. அதற்காக அது அஸ்டன் மார்ட்டின் லகோன்டா நிறுவனத்தோடு கூட்டணி அமைக்கிறது. அதன் மூலம் அஸ்டன் மார்ட்டின் பிராண்டில் புதிய மொபைலை அறிமுகப்படுத்துகிறது.
கிராண்ட்-350 அஸ்டன் மார்ட்டின் மொபைல்கள் உலோகங்களால் உருவாக்கப்படுகின்றன. அதன் மொத்த உருவமும் அனடைஸ்டு ஏர்க்ராப்ட் க்ரேடட் பொருள்களால் தயாரிக்கப்படுகிறது. இதன் ப்ரேம் சாப்பியர் கிரிஸ்டல்கள் மற்றும் ஸ்டெயின்லஸ் இரும்புகளால் தயாரிக்கப்படுகிறது. இந்த மொபைல்கள் சுத்தமான கருப்பு, சாட்டின் கருப்பு மற்றும் வெள்ளி நிறத்தில் வருகிறது. இதன் பட்டன்கள் சாப்பியர் கிரிஸ்டல் மற்றும் இரும்பு தகடுகளால் ஆனவை.
இந்த போனில் இருக்கும் ஹார்வேர்களுக்கு நாம் க்யாரண்டி வழங்கலாம். க்ராண்ட் 350 அஸ்டந் மார்ட்டினில் க்வட் பேண்ட் 3.5ஜி யூட்டிலிட்டி கம்பாட்டிபிலிட்டி உள்ளது. தரமான நவீன ப்ளூடூத் மற்றும் வைபை இவற்றில் உள்ளன. மேலும் தரமான தகவல் பரிமாற்றத்திற்காக இந்த மொபைல் புற ஹார்ட்வேர்களோடு ஸ்ன்க்ரோனைசைஸிங் செய்யும் வசதியையும் வழங்குகிறது. மேலும் புற மைக்ரோ யுஎஸ்பி போர்ட்டும் இதில் உள்ளது.
இதன் கேமார 3.2 மெகா பிக்ஸல் ஆகும். மேலும் இண்டக்ரேட்டட் ஜிபிஎஸ்ஸும் இதில் உண்டு. இதன் 2.36 இன்ட் டிஸ்ப்ளே 271 காரட் சாப்பியர் கிரஸ்டல் மூலம் 16 மில்லியன் வண்ண அடர்த்தியை சப்போர்ட் செய்கிறது. மீயூசிக் மற்றும் வீடியோ ப்ளேயர் ஆகியவை 2.5 எம்எம் கனக்டர் போர்ட்டைக் கொண்டுள்ளது.
சொகுசு வாழ்க்கையை விரும்புவர்களுக்கு இந்த மொபைல் உண்மையாகவே விருந்தாக இருக்கும். கண்டிப்பாக இதன் விலை அதிகமாக இருக்கும். குறிப்பாக இந்தியாவிற்கு இந்த வருட இறுதிக்குள் வந்துவிடும். கண்டிப்பாக இந்திய மொபைல் சந்தையைத் திருப்பிப் போடும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications