Subscribe to Gizbot

பொங்கலுக்கு வெளியாகும் "நோக்கியா லுமியா 920"

Posted By: Staff
பொங்கலுக்கு வெளியாகும்
நோக்கியா நிறுவனம் தயாரிக்கும் புதிய ஸ்மார்ட்போன் லுமியா 920 ஆகும். இந்த புதிய போன் விண்டோஸ் 8-ன் மொபைலுக்கான இயங்குதளத்தின் மூலமாக செயல்படக்கூடியது.
பிஜிஆர் இந்தியா இணையதளமானது புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நோக்கியா லுமியா 920 போன்களுக்கான அதிகாரப்பூர்வ விற்பனையாளர் "செலக்ட் சிட்டிவாக்" என்ற தென் தில்லியை சேர்ந்த ஒரு வியாபார மையம் தானாம்.
அந்த வியாபார மையம் தற்பொழுது நோக்கியா லுமியா 920 போன்களுக்கான முன்பதிவை தொடங்கியுள்ளதாம். இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் வரும் ஜனவரி 14 முதல் கடைகளில் கிடைக்குமாம். இந்த போன்களுக்கான "டெமோ" சாதனங்கள் ஜனவரி 3 முதல் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா லுமியா 920னின் சில நுட்பக்கூறுகள்:
  • 4.5 அங்குல தொடுதிரை,

  • HD என்றழைக்கப்படும் உயர்தர வீடியோ,

  • 8.7 எம்பி கேமரா,

  • 1.5 GHz டூயல்-கோர் ப்ராசெசர்,

  • 1 ஜிபி ரேம்,

  • 32 ஜிபி உள்நினைவகம்,

  • விலை ரூ.38,000லிருந்து ரூ.40,000க்குள் இருக்கலாம்.
மேலும் விலைவிபரங்கள் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot