அடிச்சான் பாரு.. OnePlus 15 போனிற்கான Bonus Drop Bundle அறிவிப்பு.. SALE DATE-ல் செம்ம டிவிஸ்டு!
அக்.27 அறிமுகமாகும் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் படியான ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனமானது ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு ஒன்பிளஸ் 15 போனஸ் டிராப் பண்டில்-ஐ அறிவித்துள்ளது. இதை இந்திய அறிமுகத்தின் போதும் எதிர்பார்க்கலாமா என்கிற கேள்விக்கான பதில் - அடுத்த மாதம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய அறிமுகத்தின் போது தான் கிடைக்கும்!
ஒன்பிளஸ் 5 போனஸ் டிராப் பண்டிலில் என்ன இருக்கிறது? ஐரோப்பிய சந்தைக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஒன்பிளஸ் 15 போனஸ் டிராப் பண்டில் ஆனது ஒன்பிளஸ் பிராண்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ப்ரோமோ ஆக்சஸெரீஸ்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. ஒன்று - உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் தினசரி அத்தியாவசிய பொருட்களுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தினசரி ஸ்லிங் பேக் ஆகும்.

ஸ்லிங் பேக்குடன் ஒன்பிளஸ் சூப்பர்வூக் 120W டூயல் போர்ட் நாண் பவர் அடாப்டர் கிட்டும் (OnePlus SuperVOOC 120W Dual Port GaN Power Adapter Kit) கிடைக்கும். பெயர் குறிப்பிடுவது போலவே இந்த அடாப்டரில் யுஎஸ்பி-சி மற்றும் யுஎஸ்பி-ஏ போர்ட் உள்ளது. இதைக்கொண்டு ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15 உட்பட பல டிவைஸ்களை சார்ஜ் செய்யலாம்.
இந்த போனஸ் டிராப் பண்டில் ஆனது €139.98 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இது 2000 யூனிட்டுகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள், இந்த பண்டிலை வெறும் €1 க்கு அன்லாக் செய்யலாம். ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் 15 போனஸ் டிராப் பண்டலை இரண்டு சுற்று விற்பனையில் வெளியிடும். ஒவ்வொரு விற்பனையும் 1000 யூனிட்களை வழங்கும். முதல் சுற்று விற்பனை அக்டோபர் 31, 2025 அன்று தொடங்கும், இரண்டாவது சுற்று நவம்பர் 12, 2025 அன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அதாவது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் ஐரோப்பிய விற்பனை ஆனது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீட்டிற்கு சற்று முன்னதாகவே வருகிறது. ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற 2025 நவம்பர் 13 ஆம் தேதி அன்று இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது (உறுதியான விதகவல்கள் இல்லை).
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம், இது என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 100W வயர்டு சூப்பர் பிளாஷ் சார்ஜ் மற்றும் 50W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7300mAh பேட்டரி இருக்கும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது ஒன்பிளஸ் 13 மாடலில் இருக்கும் 6000mAh பேட்டரி உடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய அப்டேட் ஆகும்.
மேலும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது பிஓஇ-யின் மூன்றாம் தலைமுறை ஓரியண்டல் டிஸ்பிளே (BOE's third-generation Oriental Display) உடனான உலகின் முதல் 165 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி ஸ்க்ரீனை (165Hz OLED screen) கொண்ட ஸ்மார்ட்போனாக அறிமுகமாக உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் அறிமுகமாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விலையை பொறுத்தவரை, இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போண்ணின் விலை ரூ.70,000 முதல் ரூ.75,000 வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








