Home
Mobile

6 மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள ரூ.20,000 விலை குறைப்பை பெற்ற Samsung 5G ஸ்மார்ட்போன்.. என்ன மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் (Flagship Smartphones) மீது அதாவது கேலக்ஸி எஸ் சீரீஸ் (Galaxy S Series) மாடல்கள் மீது உங்களுக்கு ஒரு கண் இருந்தால்.. இந்த சீரிஸின் கீழ் அறிமுகமான லேட்டஸ்ட் 2024 மாடல் ஒன்றின் மீது முழுதாக ரூ.20,000 விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதை பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். அதென்ன மாடல்? அதன் அசல் அறிமுகம் விலை என்ன? ரூ.10,000 விலை குறைப்பிற்கு பிறகான ஆபர் விலை என்ன? இந்த சலுகை எந்த இ-காமர்ஸ் வலைத்தளத்தில் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? அறிமுக விலையை விட ரூ.10,000 மலிவான விலைக்கு வாங்க கிடைப்பது - சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் மாடல் (Samsung Galaxy S24 Plus) தான். நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஜனவரி மாதம் நடந்த கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Galaxy S24) மற்றும் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவுடன் (Galaxy S24 Ultra) சேர்ந்து அறிமுகமானது.

ரூ.20,000 விலை குறைப்பை பெற்ற Samsung ஸ்மார்ட்போன்!

அசல் அறிமுக விலை என்ன? தற்போதைய ஆபர் விலை என்ன? இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் (12ஜிபி ரேம் + 256ஜிபிஇன்டர்னல் ஸ்டோரேஜ்) ரூ.89,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.10,000 நேரடி தள்ளுபடிக்கு பிறகு ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இந்த விலை எந்த வகையான வங்கி அல்லது எக்ஸ்சேன்ஜ் சலுகையையும் (Bank o rExchange Offer) உள்ளடக்காத நேரடி விலைக்குறைப்பாகும். ஒருவேளை நீங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் குறைக்க விரும்பினால், உங்களிடம் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டு (Flipkart Axis Bank Card) இருந்தால், கூடுதலாக 5% கேஷ்பேக் கிடைக்கும்

சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸின் அம்சங்கள்: இது 1ஹெர்ட்ஸ் முதல் 120ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் விஷன் பூஸ்டர் ஆதரவு உடனான 6.7-இன்ச் டைனமிக் AMOLED 2எக்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) மொபைல் பிளாட்ஃபார்ம் மூலம் இயக்கப்படுகிறது. இந்திய வேரியண்ட் ஆனது 12ஜிபி ரேம் உடனான எக்ஸிநோஸ் 2400 சிப்செட் உடன் வரும்.

கேமராக்களை பொறுத்தவரை. கேலக்ஸி எஸ்24 பிளஸ் மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்/1.8 அபெர்க்ஷர் லென்ஸ், 85-டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் ஓஐஎஸ் உடனான 50-மெகாபிக்சல் வைட் கேமரா + 120-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.2 உடைந்தன 12-மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் உடனான 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது.

முன்பக்கத்தை பொறுத்தவரை எப்f/2.2 அபெர்க்ஷர் லென்ஸ் மற்றும் 80-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ உடனான 12-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 45W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 4,900mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 15W சார்ஜிங் ஸ்பீடை வழங்கும் ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான வயர்லெஸ் பவர்ஷேர் ஆதரவையும் கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6இ, ப்ளூடூத் 5.3, Wவைஃபை டைரக்ட் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. மற்ற சிறப்பம்சங்களை பொறுத்தவரை இது ஐபி68 ரேட்டிங், சாம்சங் நாக்ஸ் செக்யூரிட்டி, பாஸ்கீ ஸ் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் நாக்ஸ் வால்ட்டுக்கான ஆதரவு ஆகியவைகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lowest Offer Price Ever Since Launch Flipkart Selling Samsung Galaxy S24 Plus For Rs 79999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X