இந்த Samsung 5ஜி போனை வாங்க கூட்டம் அலை கடலென குவிய போகுது! ஓ இதுதான் விஷயமா.. வாங்க பார்ப்போம்..
சாம்சங் நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் கம்மி விலையில் ஒரு அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ34 5ஜி எனும் ஸ்மார்ட்போனை தான் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த போன் காணப்பட்டது. எனவே வரும் வாரங்களில் இந்த கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி ஏ34 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ கேமரா சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

மீடியாடடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட் வசதியைக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிப ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications