Home
Mobile

கம்மி விலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் Nokia.! முழு விவரம்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கு இந்ததியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய நோக்கியா சி12 பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

அதாவது ஏற்கனவே இந்நிறுவனம் நோக்கியா சி12 மற்றும் நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் நோக்கியா சி12 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலையும் விரைவில் அறிமுகம் செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த நோக்கியா சி12 பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் Nokia.!

இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி புதிய நோக்கியா சி12 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பின்பு 720 X 1520 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 1.6ஜிகாஹெர்ட்ஸ் Unisoc ஆக்டோ-கோர் பிராஸசர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த நோக்கியா ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த நோக்கியா சி12 பிளஸ் ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா போன். குறிப்பாக எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த போன் சிறந்த வடிவமைப்புடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் Nokia.!

2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய நோக்கியா சி12 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது நோக்கியா ஸ்மார்ட்போன்

இந்த நோக்கிய சி12 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங், கைரேகை ஸ்னேகர் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த புதிய நோக்கியா போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நோக்கியா சி12 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் குறைந்த எடையுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் Nokia.!

இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த நோக்கியா சி12 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.7,999-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Low-cost Nokia C12 Plus smartphone to be launched in India soon: Check Specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X