கொத்தா தூக்குவீங்க.. 6.5-இன்ச் டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. கம்மி விலை Motorola 5ஜி போன்.! என்ன மாடல்?
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ரெட்மி நிறுவனத்திற்குப் போட்டியாக மோட்டோரோலா நிறுவனம் 5ஜி போன்களை கம்மி விலையிலும் அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் ஒரு அட்டகாசமான போனை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது மோட்டோரோலா நிறுவனம் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் மோட்டோரோலா ஜி54 5ஜி (Motorola G54 5G) எனும் ஸ்மார்ட்போனை தான் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றம் வீடியோ இணையதளத்தில் கசிந்துள்ளது. மேலும் இணையதளத்தில் வெளியான இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இதில் ஃபுல் எச்டி டிஸ்பிளே இருப்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
அதேபோல் அம்ப்ரோசியா(Ambrosia), பாலட் ப்ளூ (Ballad Blue), கரோனெட் ப்ளூ (Coronet Blue) மற்றும் அவுட்டர் ஸ்பேஸ் (Outer Space) நிறங்களில் இந்த புதிய மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டால்பி ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி குவாட் பிக்சல் (Quad Pixel) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் இரவு நேரங்களில் கூட துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக செல்பி கேமராவுக்கு என்றே பஞ்ச்-ஹோல் கட்அவுட் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன்.
இணையத்தில் வெளியான தகவலின்படி இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மீடியாடெக் சிப்செட்-ஐ விட ஸ்னாப்டிராகன் சிப்செட் மிகவும் சக்திவாய்ந்தது. எனவே மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்டபோனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
குறிப்பாக மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக 1டிபி வரை மெமரி நீடிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.

மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் குறைந்த எடையில் இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த போனின் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது. அதேபோல் இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
photo courtesy: thetechoutlook


Click it and Unblock the Notifications








