சரசரவென விலை குறைந்த ரூ.30,000 போன்கள்! அதுவும் 1 இல்ல.. மொத்தம் 5 மாடல்கள்! இதோ லிஸ்ட்!

|

பிரபல இகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) தனது வலைத்தளத்தில் மொபைல் போன்ஸ் போனான்ஸா (Mobile Phones Bonanza) என்கிற சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது!

பெயர் குறிப்பிடுவது போலவே மொபைல் போன்ஸ் போனான்ஸா என்பது ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமான ஒரு சிறப்பு தள்ளுபடி விற்பனை ஆகும்.

சரசரவென விலை குறைந்த ரூ.30,000 போன்கள்!

சரசரவென விலை குறைந்த ரூ.30,000 போன்கள்!

பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையில் - முன்னதாக - ரூ,30,000 என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைத்த சில ஸ்மார்ட்போன்கள் தற்போது மிட்-ரேன்ஜ் விலைக்கு இறங்கி வந்துள்ளன.

அதென்ன ஸ்மார்ட்போன்கள்? இந்த பட்டியலில் 5ஜி போன்களும் உள்ளனவா? அந்தந்த ஸ்மார்ட்போன்களின் ஆபர் விலை விவரம் என்ன, முக்கிய அம்சங்கள் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

01. சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி

01. சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி

சியோமி நிறுவனத்தின் Xiaomi 11i Hypercharge 5G ஸ்மார்ட்போன் ஆனது தற்போது Flipkart-ல் ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் கீழ் கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் ரூ.2,000 என்கிற தள்ளுபடியை பெறலாம்.

இது என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது?

இது என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது?

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 920 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

இது 4,500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதன் ரியர் கேமரா செட்டப்பில் 108MP மெயின் கேமரா உள்ளது மற்றும் முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.

02. விவோ வி25 5ஜி

02. விவோ வி25 5ஜி

விவோ நிறுவனத்தின் Vivo V25 5G ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரூ.27,999 என்கிற விலையில் வாங்க கிடைக்கிறது.

நீங்கள் Flipkart Axis Bank கார்டு மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் ரூ.2,000 தள்ளுபடியும் உண்டு.

கடைசியாக இந்த ஸ்மார்ட்போனின் மீது ஈஸி இஎம்ஐ விருப்பங்களும் (மாதத்திற்கு ரூ.4,667 முதல்) உள்ளன.

விவோ வி25 மாடலின் முக்கிய அம்சங்கள்:

விவோ வி25 மாடலின் முக்கிய அம்சங்கள்:

நிறம் மாறும் பேக் பேனலுடன் வரும் விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.44 இன்ச் அளவிலான டிஸ்பிளே, 64 எம்பி ரியர் கேமரா செட்டப், டைமன்சிட்டி 900 ப்ராசஸர் மற்றும் 4500mAh போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

03. ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி

03. ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி

ஒப்போ நிறுவனத்தின் Oppo F21 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது அதன் அசல் விலையில் இருந்து, 18% என்கிற தள்ளுபடியை பெற்ற பின்னர் ரூ.25,999 க்கு விற்கப்படுகிறது.

ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஆனது 2400 x 1080 பிக்சல் ரெசல்யூஷனை கொண்ட 6.43 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 2MP டெப்த் கேமரா + 2MP மேக்ரோ கேமராவுடன் இணைக்கப்பட்ட 64MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக் மற்றும் ரெயின்போ ஸ்பெக்ட்ரம் என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

04. ரியல்மி ஜிடி நியோ 3டி

04. ரியல்மி ஜிடி நியோ 3டி

ரியல்மி நிறுவனத்தின் Realme GT Neo 3T ஸ்மார்ட்போன் ஆனது தற்போது Flipkart-ல் ரூ.24,999 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது

குவால்காம் Snapdragon 870 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி உள்ளது. இது 16MP செல்பீ கேமராவை கொண்டுள்ளது. அது டிஸ்பிளேவின் மேல்-இடது மூலையில் உள்ளது!

05. மோட்டோரோலா எட்ஜ் 30

05. மோட்டோரோலா எட்ஜ் 30

மோட்டோரோலா நிறுவனத்தின் Motorola Edge 30 ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரூ.26,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Meteor Gray மற்றும் Aurora Green என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் Snapdragon 778G ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4,020mAh பேட்டரியை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Looking to buy a best mid range smartphone then do not miss these 5 phones in flipkart bonanza sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X