அடேங்கப்பா.. பட்ஜெட் விலையில் இத்தனை 5G போன்கள் கிடைக்கும்போது ரூ.30,000 போன்கள் எதுக்கு?

|

தற்போது இந்திய சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சில செல்போன் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன.

5ஜி ஸ்மார்ட்போன்கள்

5ஜி ஸ்மார்ட்போன்கள்

அதிலும் இந்திய சாம்சங், சியோமி போன்ற நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் தற்போது அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் பட்ஜெட் விலையில் வாங்கக் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

டெல்லியை வளைத்து பிடித்த Jio 5G.! இப்போ இலவசமா அன்லிமிடெட் 5ஜி.! ஒரு ரூபா கூட வேண்டாம்.!டெல்லியை வளைத்து பிடித்த Jio 5G.! இப்போ இலவசமா அன்லிமிடெட் 5ஜி.! ஒரு ரூபா கூட வேண்டாம்.!

 லாவா Blaze 5G

லாவா Blaze 5G

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட லாவா Blaze 5G ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.10,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, மீடியாடெக் Dimensity 700 பிராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

13 ஆம் நம்பர் அவ்வளவு மோசமானதா? Xiaomi கூட ஒதுக்கிடுச்சு.! அடுத்த போன் பெயர் என்ன தெரியுமா?13 ஆம் நம்பர் அவ்வளவு மோசமானதா? Xiaomi கூட ஒதுக்கிடுச்சு.! அடுத்த போன் பெயர் என்ன தெரியுமா?

 சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.15,674-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த போன் 6000 எம்ஏஎச் பேட்டரி, எக்ஸிநோஸ் 1280 ஆக்டோ-கோர் பிராசஸர், 6.6-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 50எம்பி குவாட் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா உள்ளிட்ட பல தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

சத்தமின்றி சிலிண்டர்களில் ஒட்டப்படும் QR Code: எதற்கு தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!சத்தமின்றி சிலிண்டர்களில் ஒட்டப்படும் QR Code: எதற்கு தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.18,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 6.59-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்,5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. பல 5G போன்களுக்கு இந்த Moto போன் டஃப் கொடுக்கும்போல!!மோட்டோரோலா நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. பல 5G போன்களுக்கு இந்த Moto போன் டஃப் கொடுக்கும்போல!!

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.16,999-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, மீடியாடெக் Dimensity 810 ஆக்டோ-கோர் 5ஜி சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

பூமியை காக்க செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்துள்ளேன் பூமியை காக்க செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்துள்ளேன் "என் மகன் சொல்வது உண்மை"- ஆதாரம் இங்கே!

ரியல்மி narzo 50 5G

ரியல்மி narzo 50 5G

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி narzo 50 5G ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த போன் Dimensity 810 5G சிப்செட், 48எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.

40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கி தெறிக்கவிட்ட Flipkart.! ஆளுக்கொரு டிவி பார்சல்.!40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கி தெறிக்கவிட்ட Flipkart.! ஆளுக்கொரு டிவி பார்சல்.!

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

அதேபோல் 50எம்பி டூயர் ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, 6.5-இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் D700 Octa Core பிராசஸர், 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Looking for the best 5G phones at budget prices? Here are our picks: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X