Home
Mobile

நினைச்சத விட ரூ.5000 கம்மி.. மார்ச் 12 வரை எந்த 5G Phone-ஐயும் வாங்கிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க!

பட்ஜெட் விலையில்.. அதாவது ரூ.15,000 - ரூ.20,000 என்கிற பட்ஜெட்டில்.. ஒரு பவர்ஃபுல் ஆன 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற ஐடியா உங்களுடம் இருந்தால்.. மார்ச் 12 வரை காத்திருக்கவும். அவரசப்பட்டு வேறு எந்த 5ஜி மாடலையும் வாங்கி விடாதீர்கள்.

ஏனென்றால்? மார்ச் 12 ஆம் தேதியன்று, இந்திய சந்தையில் "நம்ப முடியாத விலையில்" ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. அது ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G) மாடலாகும். நேற்று வரையிலாக இது ரூ.20,000 - ரூ.25,000 க்கும் மேலான பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

iQOO Z9 5G: மார்ச் 12 வரை எந்த 5G Phone-ஐயும் வாங்கிடாதீங்க!

ஆனால் தற்போது ஐக்யூ நிறுவனமே இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் (Under Rs.20,000 Budget) கீழ் தான் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது ஐக்யூ இஸட்9 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ஆனது எதிர்பார்த்ததை விட ரூ.5000 மலிவானதாக இருக்கப்போகிறது.

ஐக்யூ இஸட்9 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 300ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உடனான அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவுடன் வரும் என்று டீஸ் செய்யப்படுகிறது. மேலும் இதில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) மற்றும் 5,000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

iQOO Z9 5G: மார்ச் 12 வரை எந்த 5G Phone-ஐயும் வாங்கிடாதீங்க!

ஐக்யூ இஸட்9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (MediaTek Dimensity 7200 SoC) கொண்டு இயங்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் டைமன்சிட்டி 7200 சிப்செட்டுடன் ரூ.20000 க்குள் என்கிற செக்மென்ட்டில் வரும் முதல் ஸ்மார்ட்போன் இதுதான் (Segment first Smartphone) என்றும் கூறப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ஐக்யூ இஸட்9 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்882 மெயின் கேமரா இடம்பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 7.83 மிமீ தடிமனை மட்டுமே கொண்டிருக்கும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இது சற்றே ஸ்லிம் ஆன வடிவமைப்பை (Slim Design) பெறும்.

iQOO Z9 5G: மார்ச் 12 வரை எந்த 5G Phone-ஐயும் வாங்கிடாதீங்க!

ஐக்யூ இஸட்9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ இஸட்7 5ஜி (iQOO Z7 5G) ஸ்மார்ட்போனிற்கு அடுத்துவரும் மாடலாகும். அந்த நேரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கு வாங்க கிடைத்தது

ஐக்யூ இஸட்7 5ஜி ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஐக்யூ இஸட்8 (iQOO Z8) மாடலானது கடந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அது இன்னமும் இந்திய சந்தைக்கு வரவில்லை; இனிமேலும் அது வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் மார்ச் 12 ஆம் தேதியன்று ஐக்யூ இஸட்9 மாடலே இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும்.

ஐக்யூ இஸட்7 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.38-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 920 சிப்செட் (MediaTek Dimensity 920 SoC) உடன் இயங்குகிறது. இதில் 64 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப், 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களும் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking For New Powerful 5G Phone Under Rs 20000 Wait Until March 12 iQOO Z9 5G Launch Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X