இப்படி ஒரு 5G போனை யாருமே எதிர்பார்க்கல...கெத்து காட்டிய Oppo.!

|

ஒப்போ நிறுவனம் சீனாவில் ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக 5ஜி ஆதரவுடன் தரமான அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஏ58 5ஜி விலை

ஒப்போ ஏ58 5ஜி விலை

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Oppo A58 5G ஸ்மார்ட்போனின் விலை CNY 1.699 (இந்திய மதிப்பில் ரூ.19,000) ஆக உள்ளது. மேலும் இந்த போன் ப்ரீஸ் பர்பில், ஸ்டார் பிளாக் மற்றும் சீ ப்ளூ நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

2 வருஷம் வாராண்டி.. அப்புறம் என்னப்பா? வாங்கிட வேண்டியது தானே! NOKIA G60 விற்பனை ஸ்டார்ட்!2 வருஷம் வாராண்டி.. அப்புறம் என்னப்பா? வாங்கிட வேண்டியது தானே! NOKIA G60 விற்பனை ஸ்டார்ட்!

50எம்பி பிரைமரி சென்சார்

50எம்பி பிரைமரி சென்சார்

ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் பல்வேறுகேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

கேப்பில் புகுந்து Amazon பார்த்த வேலை., இந்தியர்களுக்கு அமோக லாபம்! உங்ககிட்ட ஆண்ட்ராய்ட் போன் இருக்கா?கேப்பில் புகுந்து Amazon பார்த்த வேலை., இந்தியர்களுக்கு அமோக லாபம்! உங்ககிட்ட ஆண்ட்ராய்ட் போன் இருக்கா?

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போனில் 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 720 x 1612 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

50எம்பி ரியர் கேமராவுடன் 5G போனை அறிமுகம் செய்து தெறிக்கவிட்ட இந்திய நிறுவனம்: கம்மி விலை.!50எம்பி ரியர் கேமராவுடன் 5G போனை அறிமுகம் செய்து தெறிக்கவிட்ட இந்திய நிறுவனம்: கம்மி விலை.!

Dimensity 700 சிப்செட்

Dimensity 700 சிப்செட்

ஒப்போ ஏ58 5ஜி போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இனி தேடினாலும் கிடைக்காது.. இரவோடு இரவாக WhatsApp-ல் இருந்து காணாமல் போன முக்கிய அம்சம்!இனி தேடினாலும் கிடைக்காது.. இரவோடு இரவாக WhatsApp-ல் இருந்து காணாமல் போன முக்கிய அம்சம்!

 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஃபுல் எச்டி வீடியோ பதிவு செய்ய முடியும். அதேபோல் இந்த போன் 5ஜி வசதியுடன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

உலகத்தில யாருமே அடுத்த 25 நாளுக்கு iPhone 14 Pro / Max வாங்கவே முடியாதா? என்ன சொல்றீங்க.!உலகத்தில யாருமே அடுத்த 25 நாளுக்கு iPhone 14 Pro / Max வாங்கவே முடியாதா? என்ன சொல்றீங்க.!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஒப்போ ஏ58 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ போன்.

ராசா.. உனக்காக தான் இங்க பல பேர் வெயிட்டிங்! ஒரே Phone-ல மூன்று 50MP கேமராக்கள்!ராசா.. உனக்காக தான் இங்க பல பேர் வெயிட்டிங்! ஒரே Phone-ல மூன்று 50MP கேமராக்கள்!

3.5எம்எம் ஆடியோ ஜாக்

கலர்ஓஎஸ் 12.1 மூலம் இந்த ஒப்போ போன் இயங்குகிறது. பின்பு வைஃபை 5, புளூடூத் வி5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த Oppo A58 5G மாடல்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Looking for new Oppo 5G smartphone under rs 20000 Wait for Oppo A58 5G India Launch: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X