வெறும் ரூ.19,000 க்கு.. யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு OnePlus போன்-ஆ!
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 5ஜி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி
ஆனால் ஒன்பிளஸ நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே
புதிய ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சலஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போன். ஆனால் எச்டி பிளஸ்டிஸ்பிளேவுக்கு பதிலாக ஃபுல் எச்டி டிஸ்பிள இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

என்ன சிப்செட்?
ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் Oxygen OS சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
குறிப்பாக Dimensity சிப்செட் வசதியைக் கொண்ட போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது ஒன்பிளஸ்.

அட்டகாசமான கேமரா
ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் உதவியுடன் குறைவான வெளிச்சம் உள்ள இடங்களில் கூட தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்
ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அசத்தலான கனெக்டிவிட்டி
ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி எஸ்/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.

விலை?
குறிப்பாக 4ஜி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போனின் விலை$228 (இந்திய மதிப்பில் ரூ.19,000) ஆக உள்ளது. மேலும் இந்த புதிய போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications