Home
Mobile

இப்படியொரு பட்ஜெட் விலை Vivo போனுக்காக தான் வெயிட்டிங்: எப்போது அறிமுகம் தெரியுமா?

விவோ நிறுவனம் இந்த மாதம் பல அசத்தலான புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் விவோ வி25 ப்ரோ எனும் 5ஜி ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளது விவோ.

  ஆகஸ்ட் 11

ஆகஸ்ட் 11

அதேபோல் மலேசியாவில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி விவோ Y35 4G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம். குறிப்பாக இந்த விவோ Y35 4G போன் இந்தியா மற்றும் பல நாடுகளில் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய விவோ போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சூப்பரான எல்சிடி டிஸ்பிளே

சூப்பரான எல்சிடி டிஸ்பிளே

விரைவில் அறிமுகமாகும் விவோ Y35 4G ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு இந்த ஸ்மார்ட்போன்60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டிஸ்பிளேவை விடஇதன் சிப்செட் வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது விவோ நிறுவனம்.

 ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

புதிய விவோ Y35 4G ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 4ஜி சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவேஇந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் இந்த சிப்செட்-இன் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த விவோ Y35 4G ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது
இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது விவோ Y35 4G ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன்இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ட்ரிபிள் ரியர் கேமரா

ட்ரிபிள் ரியர் கேமரா

விவோ Y35 4G ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா (f/1.8) + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர்
கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 அருமையான பேட்டரி

அருமையான பேட்டரி

இந்த புதிய விவோ Y35 4G ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்த போன் 5000 எம்ஏஎச்பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனில் கைரேகை ஸ்கேனர் வசதி கூட உள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஏ-ஜிபிஎஸ், சார்ஜ் செய்வதற்கான யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த விவோ Y35 4G ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

விவோ வி25 ப்ரோ 5ஜி

விவோ வி25 ப்ரோ 5ஜி

மேலும் இந்த மாதம் இறுதியில் அறிமுகமாகும் விவோ வி25 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அசத்தலான அம்சங்களுடன்
வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த விவோ வி25 ப்ரோ 5ஜி போன் ஆனது மீடியாடெக் Dimensity 1300 SoC சிப்செட் வசதியை கொண்டுள்ளது.

மேலும் 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3D curved AMOLED டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 64எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா,
4830 எம்ஏஎச் பேட்டரி, 66W பிளாஷ் சார்ஜிங் வசதி போன்ற பல அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

அதேபோல் விவோ நிறுவனம் விரைவில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Looking for New Mid-Range Smartphone 2022 Vivo Y35 launch on August 11: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X