Home
Mobile

Moto-வின் மிரட்டலடி.. வெறும் ரூ.6,249-க்கு.. 6.6-இன்ச் டிஸ்பிளே, 16GB ரேம், IP52 ரேட்டிங், 5000mAh பேட்டரி!

மோட்டோரோலா அண்ணே.. இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு சூப்பரான ஸ்மார்ட்போனை விக்கிறீங்களே.. கம்பெனிக்கு எப்படி கட்டுப்படி ஆகுது? என்று கேட்கும்படியாக.. மோட்டோ ஜி சீரிஸின் கீழ் அறிமுகமான ஒரு லேட்டஸ்ட் மாடல் இன்று முதல் (பிப்.22) இந்திய விற்பனையை தொடங்குகிறது!

அதென்ன ஸ்மார்ட்போன்? நாம் இங்கே பேசுவது மோட்டோ ஜி04 (Moto G04) ஸ்மார்ட்போனை பற்றித்தான். கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart), மோட்டோரோலா.இன் (Motorola.in) மற்றும் ஆப்லைன் ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக விற்பனைக்கு வரும் (பிப்.22 மதியம் 12 மணி முதல்)!

Moto-வின் மிரட்டலடி.. வெறும் ரூ.6,249-க்கு இவ்ளோவா!

என்ன விலை? மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை நிர்ணயம் ரூ.6,999 ஆகும். இருப்பினும் 64ஜிபி வேரியண்ட் மீது ரூ.750 எக்ஸ்சேஞ்ச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.6,249 க்கு வாங்க முடியும்.

மறுகையில் உள்ள ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.7,499 ஆகும். இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே கான்கார்ட் பிளாக் (Concord Black), சாடின் ப்ளூ (Satin Blue), சீ க்ரீன் (Sea Green) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு (Sunrise Orange) என்கிற 4 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

Moto-வின் மிரட்டலடி.. வெறும் ரூ.6,249-க்கு இவ்ளோவா!

என்னென்ன அம்சங்கள்? மோட்டோரோலாவின் இந்த லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனானது 720 x 1600 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 269பிபிஐ பிக்சல் டென்சிட்டி (269ppi pixel density) மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio) உடனான 6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை (IPS LCD Display) கொண்டுள்ளது.

மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் டி606 சிப்செட் (UniSoC T606 SoC) உடனாக மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) உடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 8ஜிபி வரையிலான ரேம் உடன் வருகிறது. கூடுதலாக விர்ச்சுவல் ரேம் (Virtuval RAM) அம்சம் வழியாக மேலும் 8ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவையும் கொண்டுள்ளது.

Moto-வின் மிரட்டலடி.. வெறும் ரூ.6,249-க்கு இவ்ளோவா!

மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான மை யுஎக்ஸ் (My UX) மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை எல்ஐடி பிளாஷ் (LED Flash) உடனான 16 மெகாபிக்சல் ரியர் கேமராவையும், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால் களுக்காக 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது

மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும் இது எக்ஸ்டெர்னல் மைக்ரோ எஸ்டி கார்டு (External microSD card) வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவையும் கொண்டுள்ளது. சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட, இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் (Dust and splash) எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கை (IP52 Rating) பெற்றுள்ளது.

மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன் ஆனது 10W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரும் (Fingerprint sensor) உள்ளது, மேலும் இது டால்பி அட்மாஸ் ஆதரவு (Dolby Atmos Support) உடனான ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் (Stereo speakers) கொண்டுள்ளது. கடைசியாக இது 178.8 கிராம் எடையை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Looking For New Budget Smartphone Under Rs 7000 Check Moto G04 Price Specifications Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X