என்னப்பா சொல்றீங்க.. இந்த போனின் விலை வெறும் ரூ.11,000 தானா?!

|

ரூ.20,000 கொடுத்து ஸ்மார்ட்போன் வாங்குற அளவுக்கு நான் ஒன்னும் பணக்காரன் இல்லப்பா.. ரூ.10,000 இல்லனா அதிகபட்சம் ரூ.15,000 தான் நம்ம ரேன்ஞ்சு!

அதுக்குள்ள ஏதாவது ஸ்மார்ட்போன் அறிமுகமானால் மட்டும் என் பக்கம் வாங்க.. இல்லனா அப்படியே போயிடுங்க! என்று கறார் ஆக கூறுபவரா நீங்கள்?

ஆம் எனில்.. இந்த போன் உங்களுக்கானது தான்!

ஆம் எனில்.. இந்த போன் உங்களுக்கானது தான்!

நீங்கள் ஒரு பட்ஜெட் வாசி, அதிலும் நீங்களொரு மோட்டோரோலா போன் விரும்பி என்றால், நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கானது தான்.

அது Moto G32 ஸ்மார்ட்போன் ஆகும். இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், மோட்டோ ஜி32 மாடலை தொடர்ந்து, மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5G ஸ்மார்ட்போனாக Moto G62 மாடலும் இந்தியாவில் அறிமுகமாகிறது. அதிலும் ஒரு குட் நியூஸ் இருக்கிறது.

அது என்னவென்றால் - மோட்டோ ஜி62 5ஜி போனும் கூட பட்ஜெட் விலையில் தான் அறிமுகம் ஆகும்.

BSNL சிம் கார்டு வச்சி இருக்கீங்களா? அப்போ உங்க மனசை கல்லாக்கிகோங்க!BSNL சிம் கார்டு வச்சி இருக்கீங்களா? அப்போ உங்க மனசை கல்லாக்கிகோங்க!

இந்த 2 போன்களும் எப்போது அறிமுகமாகும்?

இந்த 2 போன்களும் எப்போது அறிமுகமாகும்?

இந்தியாவில், மோட்டோரோலா நிறுவனம் தனது ஜி-சீரிஸின் கீழ் 2 புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட தயாராக உள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன்கள் ஒரே நாளில் அறிமுகம் ஆகாது; மாறாக தனித்தனியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

அதாவது மோட்டோ ஜி32 ஆனது ஆகஸ்ட் 9 ஆம் தேதி அறிமுகமாகும். மறுகையில் உள்ள மோட்டோ ஜி62 5ஜி ஆனது ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும்.

மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனின் விலை!

மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனின் விலை!

லெனோவாவுக்கு சொந்தமான இந்நிறுவனம் மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த கையோடு, அது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதையும் உறுதி செய்துள்ளது.

மைஸ்மார்ட்ப்ரைஸ் உடனாக இணைந்து டிப்ஸ்டர் யோகேஷ் ​பிரார் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆகஸ்ட் 9 இல் அறிமுகமாகும் Moto G32 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.11,000 முதல் ரூ.13,000 க்குள் எங்காவது ஒரு புள்ளியில் அமரும்.

எதுவும் சொல்ல வேண்டாம்; இந்தா ரூ.9,999! முதல்ல இந்த Phone-ஐ கொடு!எதுவும் சொல்ல வேண்டாம்; இந்தா ரூ.9,999! முதல்ல இந்த Phone-ஐ கொடு!

Flipkart வழியாக Moto G32 வாங்க கிடைக்கும்!

Flipkart வழியாக Moto G32 வாங்க கிடைக்கும்!

அறிமுகமானதும் மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் ஆனது Flipkart வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

மேலும் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 64 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்கும். மேலும், இது 4GB RAM உடன் அனுப்பப்படலாம்.

இது தவிர்த்து Moto G32 ஆனது சாடின் சில்வர் மற்றும் மினரல் கிரே என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி32 என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

மோட்டோ ஜி32 என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

Moto G32 ஆனது 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவை பேக் செய்யும். இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல் எச்டி+ரெசல்யூஷனை வழங்கும். இதன் டிஸ்பிளேவில் செல்பீ கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட்டும் இடம்பெறும்.

மோட்டோரோலோவின் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 680 சிப்செட் உடனாக 4GB RAM மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும். இதன் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி 1 டிபி வரை நீட்டிக்க முடியும்.

Nothing கம்பெனிக்கு எவ்ளோ நக்கல் இருந்தா இப்படி செய்யும்? கேட்கும் போதே கடுப்பாகுது!Nothing கம்பெனிக்கு எவ்ளோ நக்கல் இருந்தா இப்படி செய்யும்? கேட்கும் போதே கடுப்பாகுது!

கேமரா, ஓஎஸ், பேட்டரி பற்றி?

கேமரா, ஓஎஸ், பேட்டரி பற்றி?

ரியர் கேமராவை பற்றி பேசுகையில், இது 50MP மெயின் சென்சார் + 118-டிகிரி FOV லென்ஸுடன் 8MP அல்ட்ரா-வைட் சென்சார் + 2MP மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் கேமரா செட்டப்பை பெறுகிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, 16MP செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான UI கொண்டு இயங்கும் Moto G32 ஆனது 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 30W சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

Moto G62 5G ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்?

Moto G62 5G ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்?

முன்னரே குறிப்பிட்டபடி, இந்தியாவில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி, மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் அறிமுகமான பின்னர், ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

அது ரூ.15,000 என்கிற பட்ஜெட்டை சுற்றிய விலை நிர்ணயத்தை பெறும் என்று கூறப்படுகிறது. அதிகபட்சமாக இது ரூ.17,000 வரை செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!

Moto G62 5G என்னென்ன அம்சங்களை வழங்கும்?

Moto G62 5G என்னென்ன அம்சங்களை வழங்கும்?

மோட்டோ G62 5G ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் Snapdragon 480+ SoC உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தியாவில் இது சற்றே சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 695 மூலம் இயக்கப்படலாம்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ராவைடு கேமரா (இது டெப்த் சென்சார் ஆகவும் செயல்படும்) + 2எம்பி மேக்ரோ சென்சார் உள்ளது.

இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. மேலும் இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது.

Photo Courtesy: Motorola

Best Mobiles in India

English summary
Looking for New Budget Smartphone 2022 Moto G32 India launch on August 9

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X