Home
Mobile

மத்த போன்லாம் தள்ளு.. இதை அள்ளு.. ரூ.5,799 க்கு டூயல் SIM, 8GB ரேம், AI கேமரா, 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரூ.10,000 குள்ள ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடுபவர்கள் கண்களில் இது சிக்கினால் "ஒன்னுக்கு ரெண்டா" ஆர்டர் போட்ருவாங்க.. ரூ.6000 பட்ஜெட்டில் இப்படி ஒரு ஸ்மார்ட்போனா என்று அசரவைக்கும் படியான அம்சங்களுடன், கடந்த மாதம் அறிமுகமான ஒரு ஐடெல் ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் இந்தியா வலைத்தளம் (Amazon India Website) வழியாக ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஐடெல் ஸேனோ 10 (Itel ZENO 10) மாடலை பற்றித்தான். கடந்த 2025 ஜனவரி மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், தற்போது அமேசான் இந்தியா வழியாக, 16% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.6,899 க்கு பதிலாக ரூ.5,799 க்கு வாங்க கிடைக்கிறது. இது 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் வேரியண்ட்டின் ஆபர் விலையாகும்.

ரூ.5,799 க்கு டூயல் SIM, 8GB ரேம், AI கேமரா, 5000mAh பேட்டரி!

இந்த ஆபர் விலை ஐடெல் ஸேனோ 10 ஸ்மார்ட்போனின் பாண்டாம் கிரிஸ்டல் (Phantom Crystal) மற்றும் ஒபல் பர்பிள் (Opal Purple) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களின் மீது கிடைக்கிறது. இதேபோல ஐடெல் ஸேனோ 10 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.6,199 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

ஐடெல் ஸேனோ 10 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டூயல் சிம் ஆதரவுடன் (Dual SIM Support) வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.56-இன்ச் HD+ IPS டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சமீபத்திய ஐடெல் ஸ்மார்ட்போன்களை போலவே, இதிலும் செல்பீ கேமரா கட்அவுட்டை சுற்றி பேட்டரி சார்ஜிங் விவரங்கள் மற்றும் இன்கம்மிங் கால் எச்சரிக்கைகள் போன்ற அறிவிப்புகளைக் காட்டும் டைனமிக் பார் (Dynamic Bar) அம்சம் முள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இது 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் ஆப்ஷன்களுடன் குறிப்பிடப்படாத ஆக்டா-கோர் சிப்செட்டில் இயங்குகிறது. விர்ச்சுவல் ரேம் அம்சம் (Virtual RAM Feature) வழியாக பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜில் இருந்து, இந்த ஸ்மார்ட்போனின் ரேம்-ஐ 8ஜிபி வரை விரிவாக்க முடியும். கேமராக்களை பொறுத்தவரை AI ஆதரவு கொண்ட 8எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உள்ளது

முன்பக்கத்தில், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. பட்ஜெட் விலை மாடலாக இருந்தாலும் கூட இந்த போனில் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) உள்ளது மற்றும் இது ஃபேஸ் அன்லாக் (Face Unlock) அம்சத்தையும் ஆதரிக்கிறது. கடைசியாக இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

ஒருவேளை உங்களுடைய தேடல் ரூ.6000 பட்ஜெட்டில் இல்லை.. அதை தாண்டிய பட்ஜெட்டில் உள்ளதென்றால் அல்லது நீங்கள் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டியது ரியல்மி இந்தியா வலைத்தளத்திற்கு தான். ஏனென்றால் 2025 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னட்டு ரியல்மி நிறுவனமானது வேலன்டைன்ஸ் டே சேல் (Valentines Day Sale) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு விற்பனை ஆனது இன்று தொடங்கி, அதாவது பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் 2 வகையான காம்போ ஆபர்கள், 5 ஸ்மார்ட்போன்கள் மீதான கூப்பன் ஆபர்கள் மற்றும் 7 ஸ்மார்ட்போன்கள் மீது பேங்க் ஆபர்கள் அனுக கிடைக்கிறது. அப்படியாக எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன ஆபர் / டிஸ்கவுண்ட் கிடைக்கிறது என்கிற விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking For New Budget Phone Under Rs 6000 Check Out Amazon Offer on Itel Zeno 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X