பலே டிஸ்கவுண்ட்.. 2025 நியூ இயர்-க்கு புது 5G Phone வாங்குறது கன்ஃபார்ம்.. ஒரே நேரத்துல 4 போன்கள் மீது ஆபர்!
புதிய 5ஜி போன் (New 5G Phone) வாங்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து விட்டீர்கள், ஆனால் எந்த மாடலை வாங்குவது? எவ்வளவு பட்ஜெட்டில் வாங்குவது (அதாவது ரூ.10,000 க்குள்-ஆ, ரூ.20,000 க்குள்-ஆ அல்லது ரூ.30,000 மேல்-ஆ) என்கிற குழப்பம் உங்களிடம் இருந்தால்.. ஃப்ரீயா விடுங்க!
அமேசான் இந்தியா (Amazon India) வளைத்தளத்தில் 5ஜி சூப்பர் ஸ்டோர் என்கிற ஒரு பக்கம் இருக்கிறது. அது 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீதான பிரத்யேக ஆபர்களை வழங்கும் பக்கமாகும். அதில் ரூ.8,500 - ரூ.48,000 வரையிலான பட்ஜெட்டில்.. பல பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

எந்தெந்த 5ஜி மாடல்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது என்கிற பட்டியலை 2 வகைகளாக பிரித்து கீழே பட்டியலிட்டு உள்ளோம். முதல் வகையில் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் மாடல்கள் உள்ளன. இரண்டாவது வகையில் ரூ.50,000 வரை செல்லும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
அமேசான் 5ஜி சூப்பர் ஸ்டோரின் கீழ் கிடைக்கும் 4 முக்கிய ஆபர்கள்:
01. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): இது ரூ.10,999 க்கு பதிலாக ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கிறது.
02. ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (Itel Color Pro 5G): இது ரூ.12,599 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.
03. நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G): இது ரூ.12,999 க்கு பதிலாக ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கிறது.
04. லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze Curve 5G): இது ரூ.21,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது.
அமேசான் 5ஜி சூப்பர் ஸ்டோரின் கீழ் கிடைக்கும் மற்ற 5ஜி போன்கள் மீதான ஆபர்கள்:
01. ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R): இது ரூ.39,999 க்கு பதிலாக ரூ.32,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G): இது ரூ.15,999 க்கு பதிலாக ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது.
03. ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G); இது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது.
04. ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G): இது ரூ.59,999 க்கு பதிலாக ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 6.88-இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 4ஜிபி LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட், 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உடனான டூயல் ரியர் கேமரா செட்டப், 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது
நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள: இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 720 x 1,612 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 560 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி வழக்கமான ரேம் + 5ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என மொத்தம் 11ஜிபி ரேம்-ஐ வழங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை ஆட்டோ ஃபோகஸ் ஆதரவு 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 20W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட், ,8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான UFS 3.1 ஸ்டோஜ், விர்ச்சுவல் ரேம் அம்சம் வழியாக மொத்த ரேம்-ஐ 16ஜிபி வரை விரிவாக்கம் செய்யும் ஆதரவு போன்றவைகளை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இஐஎஸ் (EIS) ஆதரவு உடனான 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சாரை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடன் 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








