10-க்கு 10 மார்க் கொடுக்கலாம் போலயே.. ஆரம்பத்திலேயே அசத்தும் 2 புதிய Smartphone-கள்!

|

பிரபல சீன மொபைல் நிறுவனத்தின் 2 புதிய ஸ்மார்ட்போன்களை பார்க்கும் போதே.. "அட! 10-க்கு 10 மார்க் கொடுக்கலாம் போலயே!" என்கிற எண்ணம் உங்களுக்கும் எழுந்தால்.. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!

அதென்னஸ்மார்ட்போன்கள்? ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு அந்த 2 ஸ்மார்ட்போன்களும் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ரியல்மியின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள்!

ரியல்மியின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள்!

நாம் இங்கே பேசுவது, அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள ரியல்மி நிறுவனத்தின் 2 புதிய ஸ்மார்ட்போன்களை பற்றித்தான்!

அது ரியல்மி 10 சீரீஸ் மாடல்கள் ஆகும். இந்த சீரீஸின் கீழ் மொத்தம் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அது ரியல்மி 10 (Realme 10) மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் (Realme 10 Pro Plus) மாடல்கள் ஆகும்!

25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!

ரியல்மி 10 ப்ரோ பிளஸ்: என்ன விலைக்கு வரும்?

ரியல்மி 10 ப்ரோ பிளஸ்: என்ன விலைக்கு வரும்?

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.25,990 க்கு வாங்க கிடைக்கலாம். இதுவொரு 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

ரியல்மி 10: என்ன விலைக்கு வரும்?

ரியல்மி 10: என்ன விலைக்கு வரும்?

மறுகையில் உள்ள ரியல்மி 10 ஆனது ரூ.15,999 என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு விலை விவரங்களுமே தோராயமான விலைகளே ஆகும்; அதிகாரப்பூர்வமான விலைகள் சற்றே வேறுபடலாம்!

இந்த 18 Phone-களில் 1 உங்களிடம் இருந்தால் 2022 முடிவதற்குள் ஒரு நல்லது நடக்கும்! என்னது அது?இந்த 18 Phone-களில் 1 உங்களிடம் இருந்தால் 2022 முடிவதற்குள் ஒரு நல்லது நடக்கும்! என்னது அது?

எப்போது அறிமுகமாகும்?

எப்போது அறிமுகமாகும்?

ரியல்மி நிறுவனத்தின் இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே வருகிற நவம்பரில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் வண்ணம், ரியல்மி நிறுவனம் அதன் 10 சீரீஸ் ஸ்மார்ட்போனின் டிசைனை டீஸ் செய்துள்ளது!

ரியல்மி நிறுவனத்தின் இந்த டீசர் ஆனது ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் எதையும் வெளிப்படுத்தவில்லை மற்றும் அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் ரியல்மி 10 மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களை பற்றிய போதுமான லீக்ஸ் தகவல்கள் எங்களிடம் உள்ளன!

ரியல்மி 10-ல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ரியல்மி 10-ல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ரியல்மி 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme 9 சீரீஸின் அப்கிரேட்டட் வெர்ஷனாக வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

இந்த சீரீஸின் கீழ் வரவுள்ள வெண்ணிலா வேரியண்ட் ஆன Realme 10 ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது ரியல்மி 10 ஆனது ஒரு 4G ஸ்மார்ட்போனாக இருக்கும்!

"இதை" உடனே டெலிட் செஞ்சிட்டா உங்க Phone-க்கு நல்லது.. இல்லனா? வார்னிங் கொடுக்கும் Google!

பெரிய டிஸ்பிளே.. நல்ல பேட்டரி!

பெரிய டிஸ்பிளே.. நல்ல பேட்டரி!

இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.4-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்பக்கத்தில் பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிஸ்ப்ளே இடம்பெறவும் வாய்ப்புள்ளது.

ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்யலாம். இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 10 ப்ரோ பிளஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ரியல்மி 10 ப்ரோ பிளஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ரியல்மி 10 சீரிஸின் ப்ரோ பிளஸ் வேரியண்ட் ஆனது மீடியாடெக் Dimensity 1080 சிப்செட்டை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது ஒரு 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும்.

மேலும் இது 6.7-இன்ச் அளவிலான AMOLED FHD+ டிஸ்ப்ளேவை பேக் செய்யலாம் என்கிற வதந்தியும் பரவுகிறது. வடிவமைப்பை பொறுத்தவரை, இதன் டிஸ்பிளே கர்வ்டு எட்ஜ்களை கொண்டிருக்கும் மற்றும் இது அண்டர் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டிருக்கும்!

வயிறு எரியுதுனு புலம்பும் OnePlus போன் பயனர்கள்.. சொந்த கம்பெனியே வச்ச புது ஆப்பு!வயிறு எரியுதுனு புலம்பும் OnePlus போன் பயனர்கள்.. சொந்த கம்பெனியே வச்ச புது ஆப்பு!

போதுமான ஸ்டோரேஜ்.. அதே பேட்டரி!

போதுமான ஸ்டோரேஜ்.. அதே பேட்டரி!

ஸ்டோரேஜை பொறுத்தவரை, ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலானது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்யலாம்.

பேட்டரியை பொறுத்தவரை, இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை பெறும் 5000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது!

Photo Courtesy: Realme

Best Mobiles in India

English summary
Looking for new 2022 smartphones Realme 10 and Realme 10 Pro Plus 5G launching in November

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X