Price கம்மியா இருக்கணும்.. ஆனா Performance தூக்கலா இருக்கணுமா? அப்போ இந்த 5 Phone-ல ஒன்னு தான் வாங்கணும்!
நம்மில் பலரிடமும் ஒரு தவறான புரிதல் இருக்கிறது: விலை குறைவாக இருந்தால்.. அது சுமாரான ஸ்மார்ட்போன்; அதுவே விலை அதிகமாக இருந்தால்.. அது சூப்பர் போன். உண்மை என்னவென்றால், எப்போதுமே விலை நிர்ணயத்தை வைத்து ஒரு ஸ்மார்ட்போனின் திறனை எடைபோடவே முடியாது!
மாறாக குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் ஆனது எம்மாதிரியான வேலைகளை (சாதாரணமான தினசரி பயன்பாடு அல்லது 4 - 5 மணி நேர தீவீர கேமிங் அல்லது தினமும் 2 மணி நேர போட்டோ அல்லது வீடியோ ஷூட்டிங்) மற்றும் எந்த அளவிலான மல்டி டாஸ்கிங்கை சந்திக்க உள்ளது என்பதை பொறுத்து தான் அதன் செயல்திறன் மதிப்பிடப்பட வேண்டும்.

அப்படியாக விலைக்கும் (Price), செயல்திறனுக்கும் (Performance) இடையே சரியான சமநிலையை ஏற்படுத்தும்.. நல்ல யூஸர் எக்ஸ்பீரியன்ஸை (User Experience) உறுதி செய்யும்.. மற்றும் சக்திவாய்ந்த 5ஜி ப்ராசஸர்களை (Powerful 5G Processors) பேக் செய்யும் 5 பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் (Best 5G Phones) பட்டியல் இதோ:
போக்கோ எக்ஸ்5 5ஜி (Poco X5 5G): இது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடான 5000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67 இன்ச் ஃபுல்எச்டி+ சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே, ஹெட்ஃபோன் ஜாக், சிங்கிள் ஸ்பீக்கர் போன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
ஐக்யூ இஸட்6 5ஜி (iQOO Z6 5G): இது அமேசான் (Amazon) வழியாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.58 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி, 50எம்பி ஐ ஆட்டோஃபோகஸ் மெயின் கேமரா போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
ரியல்மி 10 ப்ரோ 5ஜி (Realme 10 Pro 5G): இது பிளிப்கார்ட் வழியாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5,000mAh பேட்டரி, 108எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G): இது பிளிப்கார்ட் வழியாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G): இது அமேசான் வழியாக ரூ.15,990 க்கு வாங்க கிடைக்கிறது. இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் ஃபுல்-எச்டி+ எல்சிடி டிஸ்பிளே, 50எம்பி மெயின் கேமராவுடனான ட்ரிபிள் ரியர் கேமரா, 13எம்பி செல்பீ கேமரா, எக்ஸிநோஸ்1330 ப்ராசஸர், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 6000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








