ஆர்டர் தெறிக்குது! வெறும் ரூ.9000-க்கு மொத்த இந்தியர்களையும் வளைச்சு போட்ட Realme-யின் புது போன்.. என்ன மாடல்?
சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அல்லது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்கள் என்று வந்துவிட்டால்.. அதாவது ரூ.10,000 க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் என்று வந்துவிட்டால்.. "எண்னை தாண்டி தான் நீங்கலாம் போகணும்!" என்று கொக்கரிக்கும் அளவிற்கு ரியல்மி நிறுவனத்தின் கீழ் பல அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அவைகளுக்கு ஏல்லாம் சிம்ம செப்பமானமாக ரியல்மி சி63 (Realme C63) ஸ்மார்ட்போன்.. கடந்த ஜூலை 1 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகமானது. இன்று (ஜூலை 3) முதல் இது விற்பனைக்கு வருகிறது.
சிம்ம சொப்பனம் என்று கூறும் அளவிற்கு ரியல்மி சி63 ஸ்மார்ட்போனில் அப்படி என்ன ஸ்பெஷல்? விலையின் அடிப்படையில் இதுவொரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆக இருந்தாலும் கூட, இந்த விலைப்பிரிவில் மிகவும் அரிதாகவே பார்க்க கூடிய 45வாட் பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் (45W Fast Charging Support) இது வருகிறது. மேலும் இது லெதர் பினிஷ் பேக் பேனலையும் (Leather Finish Back Panel) கொண்டுள்ளது. இதுவும் கூட என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் பிரிவில் நாம் பார்க்க முடியாத ஒரு டிசைன் ஆகும்.

போதாக்குறைக்கு இது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் (Dust and Splash Resistance IP54 Rating) பெற்றுள்ளது. மேலும் இது ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) என்கிற தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது மழைக்காலம் அல்லது குளியலறை போன்ற ஈரமான சூழலில் மென்மையான ஸ்மார்ட்போன் பயன்பாட்டை உறுதி செய்யும் ஒரு டிஸ்பிளே அம்சமாகும்.
ரியல்மி சி63 விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ரியல்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் சிங்கிள் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை மட்டுமே அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை ரூ.8,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது லெதர் ப்ளூ (Leather Blue) மற்றும் ஜேட் கிரீன் (Jade Green) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் இன்று (ஜூலை 3) முதல் ரியல்மி.காம் (Realme.com), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் மெயின்லைன் சேனல்களின் வழியாக விற்பனைக்கு வருகிறது.

ரியல்மி சி63 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 90ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate), 450 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (450 Nits Peak Brightness), 90.3 சதவீதம் ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ (Screen to body ratio மற்றும் 180ஹெர்ட்ஸ் டச் சாம்பிள் ரேட் (Touch Sample Rate) உடனான 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை (HD Plus Display) கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை, இது ஆக்டாகோர் யுனிசாக் டி612 (Octa-core Unisoc T612 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி "வழக்கமான" ரேம் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் விர்ச்சுவல் ரேம் அம்சமும் (Virtual RAM Feature) உள்ளது, இதன் மூலம் மல்டிடாஸ்கிங் அனுபவத்தை இன்னும் மேம்படுத்த இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து கூடுதலாக 4ஜிபி ரேமை கடன்வாங்கி ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 8ஜிபி வரை விரிவாக்க முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை, இது 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை பேக் செய்கிறது. 45W பாஸ்ட் சார்ஜிங் திறனை உறுதி செய்த ரியல்மி நிறுவனம், ஸ்மார்ட்போனின் பாக்ஸில் அதற்கான பாஸ்ட் சார்ஜரை (Fast Charger) இணைக்கிறதா இல்லையா என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை. பெரும்பாலும் சார்ஜர் பாக்ஸ் உடன் இணைக்கப்படும்.
ஜூலை 2024 இல் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra) ஸ்மார்ட்போன் ஜூலை 4 ஆம் தேதியன்றும், சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) ஜூலை 8 ஆம் தேதியன்றும், ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஜூலை 9 ஆம் தேதியன்றும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications








