Home
Mobile

தக்காளி தள்ளிப்போ.. வெறும் ரூ.8499-க்கு சைனீஸ் போன்களை நூடுல்ஸ் போட்ட இந்திய கம்பெனி.. என்ன மாடல்?

பரபரப்பான பட்ஜெட் விலையில்.. ரூ.13,999 க்கு லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து முழுதாக 1 மாதம் கூட ஆகாத நிலைப்பாட்டில். இந்திய மொபைல் போன் தயாரிப்பாளர் லாவா (LAVA) நிறுவனம் அதன் யுவா சீரிஸின் கீழ் இன்னொரு புதிய மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. சுவாரசியமாக இதுவும் பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் அறிமுகமாக உள்ளது. என்ன மாடல்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? எப்போது அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது லாவா யுவா ஸ்டார் 4ஜி (Lava Yuva Star 4G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். உள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன லாவா இந்த புதிய யுவா சீரிஸ் ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. இதை உறுதிபடுத்தும் வண்னம் லாவா யுவா ஸ்டார் 4ஜி ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

வெறும் ரூ.8499-க்கு சைனீஸ் போன்களை நூடுல்ஸ் போட்ட இந்திய கம்பெனி!

டிசைன் எப்படி இருக்கும்? லீக் ஆன ரெண்டர்கள் (புகைப்படங்கள்) வழியாக லாவா யுவா ஸ்டார் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது லாவா யுவா 3 ரோ ஸ்மார்ட்போனில் நாம் கண்ட டூயல் ரியர் கேமரா டிசைனை அப்படியே பின்பற்றும் என்பது போல் தெரிகிறது. இது ரெக்டாங்குலர் ஷேப்டு கேமரா ஐலேண்டில் ரவுண்ட் எட்ஜ்களை கொண்ட டூயல் ரியர் கேமரா யூனிட் ஆக பேக் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் லாவா யுவா 3 ரோ ஸ்மார்ட்போனில் உள்ள "50எம்பி ஏஐ கேமரா" என்பதற்கு பதிலாக இதில் "மேட்ரிக்ஸ் ஏஐ கேமரா" என்கிற டெக்ஸ்ட் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன அர்த்தம், இது என்ன மாதிரியான மேம்பாடுகளை கொண்டுவரும் என்கிற விவரங்கள் இல்லை. முன்பக்க டிசைனை பொறுத்தவரை, லாவா யுவா ஸ்டார் 4ஜி ஸ்மார்ட்போன் கர்வ்டு எட்ஜ்கள் மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது. டிஸ்பிளேவின் மேல் மையத்தில் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் உள்ளது.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? லாவா யுவா ஸ்டார் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் இயக்கப்படலாம். இது 269பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.52-இன்ச் எல்சிடி எச்டி பிளஸ் (720×1,600 பிக்சல்ஸ்) 2.5டி கர்வ்டு கிளாஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது மாலி ஜி57 ஜிடிபியு மற்றும் 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட யுனிசாக் டி750 சிப்செட் கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன், 4ஜிபி வழக்கமான ரேம் உடன் சேர்த்து 4ஜிபி விர்ச்சுவல் ரேமையும் ஆதரிக்கும். கேமராக்களை பொறுத்தவரை, லாவா யுவா ஸ்டார் 4ஜி ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் உடன் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம்.

முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் சேர்க்கப்படலாம். பேட்டரியை பொறுத்தவரை, லாவா யுவா ஸ்டார் 4ஜி ஸ்மார்ட்போனில் 5,000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் அம்சத்துடன் சேர்த்து பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டிருக்கலாம்.

என்ன விலைக்கு வரும்? லாவா யுவா ஸ்டார் 4ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.10,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது ரூ.8499 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி, அம்சங்கள் குறித்த தகவல் வெளியானதும் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking For Good 4G Smartphone Under Rs 10000 Lava Yuva Star 4G to Launch in India Very Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X