Home
Mobile

ஆளுக்கு 2 தூக்குடா! ரூ.6000 பட்ஜெட்ல அடேங்கப்பா அம்சங்கள்! IR ரிமோட், 90Hz டிஸ்பிளே, 6GB ரேம், IP54, 6GB ரேம்!

ரூ.6000 பட்ஜெட்டில் இப்படி ஒரு ஸ்மார்ட்போனா என்று ஆச்சரியப்படும் அளவிலான அம்சங்களுடன், டெக்னோ நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. அது டெக்னோ பாப் 9 4ஜி (Tecno POP 9 4G) மாடலாகும். தற்போது இது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக விற்பனையை தொடங்கியுள்ளது.

டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 6ஜிபி வரையிலான டைனமிக் ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ ஜி50 சிப்செட், 13-எம்பி ரியர் கேமரா, 8-எம்பி செல்பீ கேமரா, ஐபி54 ரேட்டிங், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹைஓஎஸ் 14 போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

ஆளுக்கு 1 தூக்குடா.. ரூ.6000 பட்ஜெட்ல அடேங்கப்பா அம்சங்கள்!

டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 720 x 1,600 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (180Hz Touch Sampling Rate), 480 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 263 பிபிஐ பிக்சல் டென்சிட்டி (Pixel Density) மற்றும் 20:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio) உடனான 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது 12 என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி50 சிப்செட்டை (12nm MediaTek Helio G50 chipse) கொண்டுள்ளது. இந்த சிப்செட் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கூடுதலாக 3ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் விரிவாக்கத்தையும் (Virtual RAM expansion) ஆதரிக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 6ஜிபி ஆக விரிவாக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை இதில் 4எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (4x digital zoom) மற்றும் 1080பி வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு (1080p video recording support) கொண்ட 13 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா யூனிட் உள்ளது. முன் கேமராவில் 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது, இது 1080பி வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது.

பேட்டரியை பொறுத்தவரை இது 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது; இது யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக 15W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இத்தவிர்த்து டிடிஎஸ் ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் யூனிட் (DTS-backed dual stereo speaker unit), ஐஆர் ரிமோட் கண்ட்ரோலுக்கான (IR remote control) ஆதரவு, தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் (IP54 Rating) கொண்டுள்ளது

டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 3ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ6,699 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்: அவைகள் கிளிட்டரி ஒயிட், லைம் கிரீன் மற்றும் ஸ்டார்ட்ரெயில் பிளாக் ஆகும்.

முன்னரே குறிப்பிட்டபடி டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) வழியாக இன்று (அதாவது நவம்பர் 26 ஆம் தேதி) மதியம் 12 மணி முதல் விற்பனையை தொடங்கியது. சுவாரசியமாக டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போன் மீது ரூ.200 பேங்க் ஆஃபரும் அணுக கிடைக்கும். இப்படியாக இந்த ஸ்மார்ட்போனின் இறுதி விலையை ரூ.6,499 க்கு கொண்டுவர முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking For Good 4G Mobile Phone Under Rs 7000 Tecno Pop 9 4G India Sale Started Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X