Home
Mobile

மார்ச் 27 வரை எந்த பட்ஜெட் விலை 5ஜி போனும் வாங்கிடாதீங்க.. ஏன்னா Redmi-ன் புது தங்கக்கட்டி வருது.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற தேடலில் உள்ளவர்கள், அந்த தேடலை அப்படியே கொஞ்ச நாட்களுக்கு ஒத்திப்போட்டு விட்டு, இன்னும் 1 வாரம் அமைதியாக காத்திருக்கவும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் மார்ச் 27 ஆம் தேதி வரை காத்திருக்கவும்.

ஏன்? ஏனென்றால்.. கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகி.. பட்ஜெட் வாசிகள் மத்தியில் செம்ம ஹிட் அடித்த ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக.. அதைவிட இன்னும் மலிவான விலையில் ரெட்மி 15ஏ 5ஜி (Redmi 15A 5G) ஸ்மார்ட்போன் ஆனது வருகிற மார்ச் 27 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

மார்ச் 27 வரை எந்த பட்ஜெட் விலை 5ஜி போனும் வாங்கிடாதீங்க.. ஏன்னா?

என்னென்ன அம்சங்கள்? ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனுக்கென ஒரு பிரத்யேக மைக்ரோசைட் (Microsite) ஆனது தற்போது ஷாவ்மீ நிறுவனத்தின் இணையதளத்தில் நேரலையில் உள்ளது. அதன் மூலம்,ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரி கெப்பாசிட்டி (Battery Capacity) மற்றும் டிசைன் (Design) உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது

சியோமி இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் (Xiaomi India Online Store) நேரலையில் உள்ள மைக்ரோசைட் வழியாக ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனானது பிளக்க, ப்ளூ மற்றும் பிங்க் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 6300mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடப்படாத ஆக்டா கோர் 5ஜி சிப்செட்டை (Octa Core 5G Chipset) பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரியர் கேமரா செட்டப்பில் 32-மெகாபிக்சல் ஏஐ ப்ரைமரி கேமரா (32MP AI Primary Camera) இடம்பெறலாம்.

டிசைனை பொறுத்தவரை, ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனின் ரியர் பேனலில் இரண்டு கேமரா லென்ஸ்கள் மற்றும் ஒரு எல்இடி ஃபிளாஷ் (LED Flash) ஆகியவற்றைக் கொண்ட செவ்வக வடிவிலான கேமரா ஐலண்டை கொண்டுள்ளது. பிங்க் கலர் ஆப்ஷன் ஒரு டெக்ஸ்சர்டு பேனலை (Textured Panel) கொண்டிருப்பது போல் தெரிகிறது. முன்பக்கத்தில், டிஸ்பிளேவின் மேல் மையத்தில் வாட்டர்டிராப் ஸ்டைல் ​​நாட்ச் (Waterdrop Style Notch) உள்ளது. பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்கள் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் உள்ளன.

என்ன விலைக்கு வரலாம்? ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனின் விலையானது, கடந்த ஆகஸ்ட் 2025 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 15 5ஜி (Redmi 15 5G) மாடலுக்கு கீழே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆக இதேபோன்ற விலையை அல்லது இதைவிட சற்று மலிவான விலை நிர்ணயத்தை நாம் எதிர்பார்க்கலாம்.

ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.9-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் (1080 × 2340 பிக்சல்ஸ்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்குகிறது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முக்கியமாக இந்த ஸ்மார்ட்போன் 7,000mAh பேட்டரியுடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking For Budget Price 5G Phone Wait Redmi 15A 5G India Launch Date Confirmed Its March 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X