எதை வேணா மிஸ் பண்ணுங்க.. மார்ச் மாசம் அறிமுகமாகும் இந்த 4 போன்களை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!
கடந்த பிப்ரவரி மாதத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் முதல் ஒப்போ ஃபைண்ட் என்2 சீரிஸ் வரை ஏராளமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதே போல இந்த மார்ச் மாதத்திலும் கூட சில தரமான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
அதில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத 4 போன்களை பற்றியும், அதில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்களை பற்றிய தொகுப்பே இது. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், நாம் பார்க்கப்போகும் 4 ஸ்மார்ட்போன்களுமே ரூ.30,000 என்கிற பட்ஜெட்டில் வெளியாகும் மிட்-ரேன்ஜ் போன்களாகும்.

01. விவோ வி 27 ப்ரோ (Vivo V27 Pro)
விவோ வி27 சீரிஸின் கீழ் வரும் ப்ரோ மாடலானது மீடியாடெக் டைமன்சிட்டி 8200 (Mediatek Dimensity 8200) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். மேலும் இது அல்ட்ரா ஸ்லிம் டிசைனுடன் 120ஹெர்ட்ஸ் 3டி கர்வ்டு டிஸ்பிளேவை (Curved Display) பேக் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி23 சீரீஸில் இடம்பெற்றுள்ள கலர் சேஞ்சிங் பேக் பேனலையும் (Color Changing Back Panel) கொண்டிருக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50எம்பி சோனி IMX766V மெயின் கேமராவுடன் வரலாம்.
02. போக்கோ எக்ஸ்5 ஜிடி (Poco X5 GT)
போக்கோ எக்ஸ்5 ஜிடி ஸ்மார்ட்போனில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்ப்ளே இடம்பெறலாம். இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்பலாம். கேமராக்களை பொறுத்தவரை ஓஐஎஸ் ஆதரவுடனான 50எம்பி மெயின் கேமரா பேக் செய்யப்படலாம்.
03. ஒப்போ எஃப்23 5ஜி (Oppo F23 5G)
ஒப்போ எப்23 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் அளவிலான அமோஎல்இடி டிஸ்ப்ளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பும், 16MP செல்பீ கேமாராவும் பேக் செய்யப்படலாம். கடைசியாக இது ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியுடன் வரலாம்.
04. மோட்டோ ஜி73 (Moto G73)
மோட்டோ ஜி73 ஸ்மார்ட்போனானது 8ஜிபி ரேம் உடனான மீடியாடெக் டைமன்சிட்டி 930 (Mediatek Dimensity 930) சிப்செட் இடம்பெறலாம். இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பேக் செய்யப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியுடன் வரலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 3 (One Plus Nord 3) மாடலையும் மனதில் வைத்துக்கொள்ளவும்!
இது மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் கூட இந்த 2023 ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் கண்டிப்பாக அறிமுகமாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் இந்த மாடலையும் நீங்கள் கவனத்தில் கொள்ளலாம் மற்றும் இதுவும் கூட ரூ.30,000 பட்ஜெட்டில் தான் வரும்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 (MediaTek Dimensity 9000 SoC) சிப்செட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் டிஸ்பிளே, 16ஜிபி வரையிலான ரேம், 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான 5000mAh பேட்டரி போன்றவைகளை பேக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








