Home
Mobile

கையெடுத்து கும்பிட்டு வாங்கலாம்! ரூ.7999க்கு 6.74-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 1TB மெமரி, AI பேஸ் அன்லாக்!

ரெட்மி (Redmi) நிறுவனத்தின் சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது திடீர் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.7999 க்கு வந்துள்ளது. அதென்ன மாடல்? அதன் பழைய விலை என்ன? புதிய விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

அதென்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ரெட்மி 13சி ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என்கிற ஆப்ஷன்களில் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரூ.7999-க்கு 6.74-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 1TB மெமரி!

எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது? ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் பேஸிக் வேரியண்ட் ஆன 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் மீதும், அடுத்ததாக உள்ள 6ஜிபி ரேம் +128ஜிபி ஆப்ஷன் மீதும் ரூ.1000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.8999 க்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 13சி-யின் பேஸிக் வேரியண்ட்டின் விலை தற்போது ரூ.7999 ஆக குறைந்துள்ளது.

மறுகையில் உள்ள 6ஜிபி ரேம் +128ஜிபி ஆப்ஷன் ரூ.9,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அது ரூ.8999 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக உள்ள ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது இன்னமும் அறிமுக விலையான ரூ.11,499 க்குத்தான் வாங்க கிடைக்கிறது.

ரூ.7999-க்கு 6.74-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 1TB மெமரி!

ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் இந்த புதிய விலை நிர்ணயங்கள் அமேசான் இந்தியாவலைத்தளத்தில் ஏற்கனவே பிரதிபலிக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ரெட்மி 13சி ஆனது ஸ்டார்டஸ்ட் பிளாக், ஸ்டார்ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஸ்டார்ஷைன் கிரீன் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது,

ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இது 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் டிஸ்ளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த பட்ஜெட்-விலை ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி ஆதரவுடன் வரும் 12என்எம் ஹீலியோ ஜி85 மொபைல் பிளாட்பார்ம் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான எம்ஐயுஐ 14 கொண்டு இயங்குகிறது.

ரூ.7999-க்கு 6.74-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 1TB மெமரி!

கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 2எம்பி மேக்ரோ லென்ஸுடன் கூடிய 50எம்பி மெயின் கேமரா உள்ளது. முன்பக்க கேமராவை பொறுத்தவரை 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. செல்பீ மற்றும் ரியர் கேமராக்கள் ஆகிய இரண்டும் 1080பி வீடியோக்களை 30எப்பிஎஸ்-ல் பதிவு செய்யும் திறன் கொண்டவைகளாக உள்ளன.

5000mAh பேட்டரி உடன் வரும் ரெட்மி 13சி ஸ்மார்ட்போனில் 18W யூஎஸ்பி-சி பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவும் உள்ளது. இருப்பினும் ரெட்மி 13சி உடன் வரும் அடாப்டர் 10W-ஐ மட்டுமே ஆதரிக்கிறது. இதுதவிர்த்து டூயல் சிம் ஆதரவு, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1டிபி வரை ஸ்டோரேஜ், பாதுகாப்பிற்காக ஏஐ ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் ரெட்மி 13சி 4ஜி மாடலுடன் சேர்த்து ரெட்மி 13சி 5ஜி மாடலும் அறிமுகமானது. ரெட்மி 13சி 5ஜி மாடலும் கூட மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியானது. அதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி ரூ.10,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ரூ.12,499 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ரூ.14,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் 6.74-இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh, ரீடெயில் பாக்ஸில் 10W சார்ஜர் போன்றவைகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Looking For Best Redmi 4G Mobile Phone Under Rs 8000 Redmi 13C gets Rs 1000 Price Cut Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X