Home
Mobile

ரூ.10,000 - ரூ.25,000 பட்ஜெட்ல.. இந்த மார்ச் மாசம் புது போன் வாங்குன்னா.. இந்த 5 மாடல்ல 1 தான் வாங்கணும்!

ரூ.10,000-க்கு மேல் என்கிற பட்ஜெட் ஆக இருந்தாலும் சரி.. ரூ.25,000-க்குள் என்கிற பட்ஜெட் ஆக இருந்தாலும் சரி.. இந்த மார்ச் மாதத்தில் புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமென்கிற ஐடியா வைத்துள்ள அனைவரும் கீழ்வரும் 5 மாடல்களை பற்றியும் கட்டாயம் தெரிந்துகொண்டு, அதன் பின்னர் ஒன்றை வாங்கவும்!

ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் மோட்டோ ஜி34 5ஜி (Moto g34 5G): கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை இப்போதும் கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம். ஏனென்றால் இது ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட்டை கொண்டுள்ளது. இதைவிட இரண்டு மடங்கு விலை கொண்ட ஸ்மார்ட்போன்களில் கூட இதே சிப்செட்டை காணமுடிகிறது.

மார்ச் 2024: ரூ.10,000 - ரூ.25,000 பட்ஜெட்ல எந்த போனை வாங்கலாம்?

மேலும் இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, க்ளீன் ஆன யூஸர் இன்டர்பேஸ், 2எம்பி மேக்ரோ சென்சார் உடனான 50எம்பி கேமரா, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மோட்டோ ஜி34 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.10,999 ஆகும்.

ரூ.15,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G): இம்மாத (மார்ச் 2024) தொடக்கத்தில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் பல ப்ரீமியம் அம்சங்களை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மார்ச் 2024: ரூ.10,000 - ரூ.25,000 பட்ஜெட்ல எந்த போனை வாங்கலாம்?

லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட்16ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், இஐஎஸ் (EIS) ஆதரவுடன் 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 5,000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது

ரூ.20,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் ஐக்யூ இஸட்9 5ஜி (iQoo Z9 5G): இது சில தினங்களுக்கு முன்னர் அறிமுகமான மிகவும் லேட்டஸ்ட் மாடலாகும். இது மீடிடாடெக் டைமன்சிட்டி 7200 5ஜி சிப்செட், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 50-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப், 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மற்றும் ஐபி54 வாட்டர் அண்ட் டஸ்ட் ப்ரூஃப் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

மார்ச் 2024: ரூ.10,000 - ரூ.25,000 பட்ஜெட்ல எந்த போனை வாங்கலாம்?

இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 21,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே அமேசான் இந்தியா, ஐக்யூ இந்தியா ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கிறது. ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.2,000 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.25,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): இம்மாத தொடக்கத்தில் (மார்ச் 5) அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், முதல் நாள் விற்பனையிலேயே சக்கைபோடு போட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளே, 32எம்பி செல்பீ கேமரா, 50எம்பி + 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட், 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

ரூ.25,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் ரியல்மி 12 ப்ரோ 5ஜி (Realme 12 Pro 5G): இது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அறிமுகமானது. இதனுடன் சேர்த்து ரூ.30,000 பட்ஜெட்டில் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலும் அறிமுகமானது. கூடுதலாக ரூ.5000 செலவு செய்ய விரும்பினால் ப்ரோ பிளஸ் மாடலை வாங்கலாம்; இல்லையென்றால் ப்ரோ மாடலையே வாங்கலாம்!

ரியல்மி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கும் வாங்க கிடைக்கிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.70-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, 8எம்பி அல்ட்ராவைடு சென்சார், 32எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் உடனான 50எம்பி மெயின் கேமரா, 67W SuperVOOC சார்ஜிங் உடனான 5,000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking For Best Phone Under Rs 15000 Rs 20000 Rs 25000 You Should Buy 1 of These Top 5 Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X