Home
Mobile

வா ராஜா வா.. ரூ.10,000 பட்ஜெட்ல.. புயல் மாதிரி ஒரு Phone-ஐ இறக்கும் OPPO நிறுவனம்.. என்ன மாடல்?

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் பிரிவில் கலக்கி வரும் சாம்சங் (Samsung), மோட்டோரோலா (Motorola) மற்றும் ரியல்மி (Realme) நிறுவனங்களின் இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஒப்போ நிறுவனம் திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. ஒப்போ அதன் மிகவும் பிரபலமான ஏ சீரிஸின் கீழ் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. அது ஒப்போ ஏ3 (Oppo A3) மாடல் ஆகும். இது வருகிற ஜூலை 2 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் ஒப்போ ஏ3 ப்ரோ (Oppo A3 Pro) மாடல் அறிமுகமாகி உள்ளதால், வெண்ணிலா வேரியண்ட் ஆன ஒப்போ ஏ3 மாடலும் இந்திய சந்தைக்கு வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அப்படியாக ஒப்போ ஏ3 என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகமாகும்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஜூலை 2024 இல் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்படவுள்ளன? இதோ விவரங்கள்:

ரூ.10,000 பட்ஜெட்ல.. புயல் மாதிரி ஒரு OPPO ஸ்மார்ட்போன்!

ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் அந்த கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் (சில வாரங்களுக்கு முன் இந்தியாவில்) அறிமுகமான ஒப்போ ஏ3 ப்ரோ மாடலில் நாம் கண்ட அதே வடிவமைப்பை கொண்டுள்ளது. அதாவது ஒப்போ ஏ3 மாடலில் ஹோல் பஞ்ச் கட்அவுட் உடனான பிளாட் டிஸ்பிளே உள்ளது. இது 3 கலர் ஆப்ஷன்களில் வெளியாவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் சிப்செட்கொண்டு இயங்கும்.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். முன்பக்கத்தில் இது 8 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரை கொண்டிருக்கலாம் மற்றும் 5000mAh பேட்டரியுடன் வரலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை, ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட் அல்லது மிகவும் பழைய ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உடன் வரலாம். இந்த சிப்செட் 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் விருப்பங்கள் மற்றும் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஒப்போ ஏ3 எப்படி பார்த்தாலும் ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் தான் அறிமுகம் செய்யப்படும். ஏனென்றால் ஒப்போ ஏ3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் ரூ.20,000-க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ ஏ3 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999-க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.19,999 -க்கும் வாங்க கிடைக்கிறது.

ஜூலை 2024 இல் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகிறது? மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra) ஸ்மார்ட்போன் ஜூலை 4 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை, இந்தியாவில் இது ரூ.70,000 - ரூ.80,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகலாம்.

பின்னர் சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) ஜூலை 8 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. சிஎம்எஃப் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆன இது இந்திய சந்தையில் ரூ.17.999 முதல் ரூ.18,999 க்குள் என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஜூலை 9 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை இது ரூ.12,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். கடைசியாக சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 6 மற்றும் இஸட் போல்ட் 6 (Samsung Galaxy Z Flip 6 and Z Fold 6) ஸ்மார்ட்போன்கள் ஜூலை 10 ஆம் தேதியன்று உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

மேற்கண்ட ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து ஒப்போ ரெனோ 12 சீரிஸ் (Oppo Reno 12 Series), மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G), டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி (Tecno Spark 20 Pro 5G) மற்றும் ஹானர் 200 சீரீஸ் (Honor 200 Series) உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள; ஆனால் சரியான வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் இல்லை.

Best Mobiles in India

English summary
Looking for best phone around Rs 10000 Budget Oppo A3 to launch in China on July 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X